ARTICLE AD BOX
18 வது ஐ.பி.எல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முதல் மூன்று போட்டிகளில் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக ரியான் பராக் முதல் மூன்று போட்டிகளில் கேப்டனாக இருப்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Sanju Samsonபெங்களூருவில் பிசிசிஐயின் சார்பில் தேசிய கிரிக்கெட் அகாடெமி ஒன்று இருக்கிறது. இந்திய வீரர்கள் எல்லாருமே அங்கேதான் காயங்களிலிருந்து மீண்டு பயிற்சி மேற்கொள்வார்கள். தேசிய கிரிக்கெட் அகாடெமி ஒரு வீரரை முழுமையான உடற்தகுதியோடு இருக்கிறார் என அங்கீகரித்தால்தான் அவரால் போட்டிகளில் ஆட முடியும். இந்நிலையில், ராஜஸ்தான் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் முழுமையான உடற்தகுதியோடு இல்லை என தேசிய கிரிக்கெட் அகாடெமி அறிவித்திருக்கிறது.
அதனால், முதல் மூன்று போட்டிகளில் சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருக்கிறார்கள். இதனால், சாம்சன் ராஜஸ்தான் அணியின் ப்ளேயிங் லெவனில் ஆட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
`ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார்'
'நான் முழு உடற்தகுதியோடு இல்லை. அடுத்த 3 போட்டிகளில் என்னால் ஆட முடியாது. நம்முடைய அணியில் நிறைய ஆளுமைமிக்க வீரர்கள் இருக்கிறார்கள். அதுதான் நம்முடைய சிறப்பு. எனவே வரவிருக்கும் 3 போட்டிகளில் ரியான் பராக் கேப்டனாக செயல்படுவார்.' என சாம்சனே அறிவித்திருக்கிறார்.
Riyan Paragசஞ்சு சாம்சன் கேப்டனாக லெவனில் ஆட முடியாவிட்டாலும் 'Impact Player' ஆக பேட்டிங் மட்டும் ஆடுவார் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


9 months ago
9







English (US) ·