ARTICLE AD BOX
சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், இதுகுறித்து சச்சின் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ தலைவர் பதவியை வகித்து வந்த 70 வயதுடைய ரோஜர் பின்னி கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ரோஜர் பின்னி பிசிசிஐ சட்டங்களின்படி 70 வயதைக் கடந்தவர்கள் பதவியில் தொடர முடியாததால், ரோஜர் பின்னி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதன் பின்னர் அடுத்த பிசிசிஐ தலைவராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 52 வயதான சச்சின் டெண்டுல்கரை நிர்வகிக்கும் அவருடைய எஸ்ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறுவனம் இதுத்தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவிக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகளும், வதந்திகளும் பரவி வருவதாக எங்கள் கவனத்துக்கு வந்திருக்கிறது.
சச்சின் டெண்டுல்கர் ஆனால் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறோம். ஆதாரமற்ற யூகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதைத் தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5







English (US) ·