ARTICLE AD BOX
'குஜராத் வெற்றி; சாய் சுதர்சன் அசத்தல்!'
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி நேற்று அஹமதாபாத்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது.
Sai Sudharsanகுஜராத் அணி சார்பில் தமிழக வீரர் சாய் சுதர்சன் 53 பந்துகளில் 82 ரன்களை அடித்திருந்தார். அவருக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டிருந்தது. விருதை வாங்கிவிட்டு அவர் சில முக்கியமான விஷயங்களையும் பேசியிருந்தார்.
'சாய் சுதர்சன் மகிழ்ச்சி!',
சாய் சுதர்சன் பேசியதாவது, 'ஐபிஎல் போன்ற நீண்ட தொடரில் தொடக்கத்திலிருந்தே உங்களுக்கு மொமென்டம் கிடைக்க வேண்டும். அது எனக்கு இந்த சீசனில் கிடைத்திருப்பது மகிழ்ச்சி. அணியின் வெற்றிக்கு பங்களிப்பது எப்போதுமே என்னை உற்சாகப்படுத்தும் ஒரு விஷயம். ஆரம்பத்தில் பிட்ச் கொஞ்சம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது.
Sai Sudharsanஅதனால், சிறிது நேரம் எடுத்து விளையாட நினைத்தேன். அதற்காக நீண்ட நேரம் பொறுமையாகவும் விளையாட முடியாது. பவர்ப்ளேயின் இறுதி ஓவர்களில் இருந்து அதிரடியாக விளையாட ஆரம்பித்தேன்.
நாங்கள் சீக்கிரம் விக்கெட்டுகளை இழக்க நேர்ந்தால் என்ன செய்ய வேண்டுமென்ற புரிதல் எங்கள் மூவரிடமும் (சாய் சுதர்சன், கில் மற்றும் பட்லர்) இருக்கிறது. அதைப் பற்றி நாங்கள் தனியாக திட்டமிடுவதெல்லாம் இல்லை.
Sai Sudharsanஅப்படி நடக்கும் பட்சத்தில் யாரோ ஒருவர் நிலைத்து நின்று ஆடி கடைசிவரை போட்டியை எடுத்துச் செல்ல வேண்டும். எங்கள் அணியின் ஃபினிஷர்களுக்கு ஏற்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது எங்களின் கடமையாகப் பார்க்கிறேன்.' என்றார்.
சாய் சுதர்சனின் ஆட்டத்தைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட்டில் தெரியப்படுத்துங்கள்.

8 months ago
9







English (US) ·