ARTICLE AD BOX
திரையுலகில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜொலித்துவரும் நடிகை சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக அவரது உடல்நிலை மற்றும் நோக்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களால், வாழ்க்கையில் முற்றிலும் வேறுபட்ட கட்டத்தில் இருந்துவருகிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக புதிய படங்கள் வெளியீடு இல்லாததைக் குறிப்பிட்ட சமந்தா, ஆனாலும் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
சமந்தா, கடைசியாக அமேசான் பிரைம் சிட்டாடல் தொடரில் தோன்றியார். அவரது தயாரிப்பில் உருவான ஷுபம் படத்தின் ஒரு காட்சியில் அவர் கேமியோ செய்திருந்தார்.
Samanthaஅகில இந்திய மேலாண்மை சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொண்ட சமந்தா, அவரது கரியர் குறித்து, நட்சத்திரமாக இருக்கும்போது தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென்றாலும் குறுகிய காலமே காத்திருப்பில் இருக்க முடியும் (short shelf life) என்றார்.
Samantha பேசியது என்ன?
நடிகையாக இருந்து தொழில்முனைவோராக மாறியிருப்பது குறித்து, "ஒரு நடிகராக உங்களது காத்திருப்பு காலம் (shelf life) மிகக் குறைவு என நினைக்கிறேன். நட்சத்திர அந்தஸ்து, புகழ் மற்றும் அங்கீகாரங்கள் ஒரு மயக்கத்தை அளிக்கலாம், நீங்கள் ஒரு கணம் அது எல்லாமே நீங்கள்தான் என நினைக்கலாம். ஆனால் அது உண்மையில்லை.
ஒரு நட்சத்திரமாக இருக்கும்போது நிறைய நிறைவுகளும் நன்மைகளும் கிடைக்கும். ஆனால் அது உங்கள் சொந்த முயற்சியால் வந்து மட்டுமே அல்ல. எனவே நான் ஒரு நடிகையாக என்னுடைய shelf life-ஐ விட பெரியதான தாக்கத்தை உருவாக்க நினைத்தேன்." என்றார்.
மேலும், வெள்ளிக்கிழமைகளில் வெளியாகும் தனது படங்களின் முடிவால், மகிழ்ச்சி சிதைக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது படங்களே வெளியாகாமல் இருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சமந்தா (Samantha)100 பிரச்னைகள் இருப்பதாக பலரும் நினைக்கும் சூழலில், உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் வரும்போது, அது ஒன்று மட்டுமே நமக்குப் பிரச்னையாகத் தெரியும் என்று கூறிய சமந்தா, தனது பிரச்னைகள் மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறியிருக்கிறார்.
விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது முக்கியம் அல்ல, விளையாட்டைத் தொடர்வதுதான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.
`Met the Legend' - ஜோதிகாவை சந்தித்த கனடா நடிகை நெகிழ்ச்சி!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·