Sanjay Dutt: "என்னை லோகேஷ் கனகராஜ் வேஸ்ட் செய்துவிட்டார்; அவர் மீது கோபம்!" - சஞ்சய் தத் கலகல!

5 months ago 6
ARTICLE AD BOX

சாண்டில்வுட் இயக்குநர் ப்ரேம் இயக்கத்தில் துருவா சார்ஜா, சஞ்சய் தத், ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் 'கே.டி. தி டெவில்'.

'ஜனநாயகன்' படத்தைத் தயாரித்த கே.வி.என் தயாரிப்பு நிறுவனம்தான் இப்படத்தையும் தயாரிக்கிறது.

KD - The DevilKD - The Devil

பான் இந்தியன் திரைப்படமாக வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ் டீசர் வெளியீட்டு விழா நேற்றைய தினம் சென்னை சத்யம் திரையரங்கத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய சஞ்சய் தத், "எனக்கு கமல் சார் மீதும், ரஜினி சார் மீதும் மரியாதை உள்ளது. அவர்கள் என்னுடைய சீனியர்கள். அவர்களிடமிருந்து நான் பல விஷயங்களைக் கற்றிருக்கிறேன்.

நான் ரஜினி சாருடன் இந்தி படங்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

நான் பார்த்த மனிதர்களில் மிகவும் பணிவானவர் ரஜினி சார். நான் விஜய்யுடனும் இணைந்து நடித்திருக்கிறேன்.

Sanjay DuttSanjay Dutt

நான் லோகேஷ் கனகராஜ் மீது கோபமாக இருக்கிறேன். (சிரித்துக்கொண்டே...) அவர் எனக்கு 'லியோ' படத்தில் பெரிய அளவிலான கதாபாத்திரத்தைக் கொடுக்கவில்லை.

அவர் என்னை வீணடித்துவிட்டார். எனக்கு அஜித் சாரையும் மிகவும் பிடிக்கும். அவர் எனக்கு நெருங்கிய நண்பரும்கூட.

ரஜினி சாரின் பல திரைப்படங்களை நான் பார்த்திருக்கிறேன். இப்போது 'கூலி' படத்திற்காக நான் காத்திருக்கிறேன்." என்றார்.

Read Entire Article