ARTICLE AD BOX
1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த சரோஜா தேவி உடல்நலக் குறைவால் இன்று (ஜூலை 14) காலமாகி இருக்கிறார்.
அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
சரோஜா தேவிஅந்தவகையில் நடிகரும், மக்கள் நீதி மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் சரோஜா தேவி அவர்களின் மறைவிற்கு தனது எக்ஸ் தளப்பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ என்னைப் பார்க்கும் இடமெல்லாம் - என் எந்த வயதிலும் - கன்னம் கிள்ளும் விரலோடு, ‘செல்ல மகனே’ என்னும் குரலோடு இன்னொரு தாயாக இருந்தவர் சரோஜா தேவி அம்மா.
மொழி, பிரதேச எல்லை இல்லாது வாழ்ந்த கலைஞர். மறைந்துவிட்டார். என் இரண்டாம் படமான ‘பார்த்தால் பசி தீரும்’ படப்பிடிப்புத் தருணங்கள் தொடங்கி எத்தனை எத்தனையோ அழியா நினைவுகள் நெஞ்சில் அலையடிக்கின்றன.
சரோஜா தேவிகண்கள் ததும்புகின்றன. என்றைக்கும் என்னை முதன்மையானவனாகவே பார்க்க விரும்பிய தாயுள்ளம். வணங்கி வழியனுப்புகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

5 months ago
6





English (US) ·