Sattamum Needhiyum: ``எங்கயாச்சும் போய் செத்துப் போயிடலாம்னு யோசிச்சிருக்கேன்!'' - சரவணன் ஷேரிங்ஸ்

5 months ago 6
ARTICLE AD BOX

"நான் சினிமாவுல எதுவும் பிளான் பண்ணி செய்யல. ஹீரோவா நடிக்கணும்னு மட்டும்தான் நான் பிளான் பண்ணேன், சின்ன வயசுல இருந்தே யோசிச்சேன், ஆசைப்பட்டேன். எனக்கு நடந்தது எல்லாம் மிராக்கிள் (MIRACLE) தான்" எனப் பேசத் தொடங்கினார் நடிகர் சரவணன்.

இவரது நடிப்பில் வரும் ஜூலை 18-ம் தேதி ஜீ5 தளத்தில் 'சட்டமும் நீதியும்' தொடர் வெளியாகியிருக்கிறது. தொடரின் ப்ரொமோஷனுக்காக அவரைப் பேட்டி கண்டோம்.

Sattamum Needhiyum Sattamum Needhiyum

"ஹீரோவாகணும் என்பதை நோக்கி பயணம் பண்ணேன். அதுக்காக யார்கிட்டயும் போய் வாய்ப்பு கேட்கல. ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் சேர்ந்தேன், அங்க நடந்த ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கும்போது ஒருத்தர் என்னை ஹீரோவா செலக்ட் பண்ணார்.

அப்படி செலக்ட் ஆகி நான் ஹீரோவானேன். இந்தக் கதையை என்கிட்ட திரைக்கதையாசிரியர் சூர்யா சொன்னார். கதைக் கேட்டதும் 'தம்பி, நான் நடிக்குறேன் பா'ன்னு சொல்லிட்டேன். ஏன்னா இதுல நடிப்பதற்கான வாய்ப்பு இருக்கு. 35, 36 வருஷமா நான் இதுக்குத்தான் காத்திருந்தேன்.

இந்த மாதிரி ஒரு கதாபாத்திரம் கிடைச்சா பேரு வாங்கலாம்னு தான் காத்திருந்தேன். நான் நல்லா நடிச்சிருக்கேன்னு பேரு வாங்கியும் ஓடாமப் போன படங்கள் இருக்கு.

ஆனா, இது நான் நல்லாவும் நடிச்சு, ஓடவும் கூடிய ஒரு படைப்பா இருக்கும். அதைப் பொறுத்தவரை எனக்கு சந்தோஷம்.

நான் திரும்பி வருவேன்னு தான் காத்திருந்தேன். 'ரொம்ப நேரமா இங்கயே இருக்கீங்களே, ஏன் எங்களோட வரமாட்டீங்களா'ன்னு கேட்டவங்க நிறைய பேர் இருக்காங்க.

அதெல்லாம் இல்லப்பா, நான் வருவேன்னு சொல்லி, பல காலம் நான் பேசாமலே, நடிக்காமலே இருந்திருக்கேன்.

எனக்கு சினிமாவை விட்டா எதுவுமே தெரியாது. என்கிட்ட பத்து மாடு கொடுத்து மேய்க்கச் சொன்னா, ஒன்னு தூங்கிடுவேன், இல்லைன்னா மறந்திருவேன். திரும்பி வந்து எண்ணிப் பார்த்தா, எட்டு மாடுதான் இருக்கும்.

அது கூட எனக்கு வராது. சினிமாவுல நான் எல்லா வேலையும் செய்வேன். என் சொந்தப் படம் எடுக்கும்போது எனக்கு 29 வயசு. என்னோட 32 வயசுலேயே மொத்தமா நஷ்டமாயிடுச்சு.

ஜீரோ பேலன்ஸ்ல இருந்தேன், என்னைச் சுற்றி எதுவும் என் கூட இல்லை. கிண்டி டிரெய்ன் வர்ற இடத்துல காரை நிறுத்தி, யாருக்கும் தெரியாத மாதிரி போய் நின்னுலாம்னு நினைச்சிருக்கேன்.

Sattamum Neethiyum: வழக்கறிஞர் கொடுக்கும் கம்பேக் - எப்படி இருக்கிறது இந்த கோர்ட் ரூம் டிராமா?

உடம்புல இருக்குற அடையாளங்களை அழிச்சிட்டு, எங்கயாச்சும் வெளியூர்ல போய் செத்துப் போயிடலாம்னு யோசிச்சிருக்கேன்.

எனக்கு நடந்த சம்பவங்கள் அந்த மாதிரி. நிறைய நம்பிக்கைத் துரோகங்களையும், ஏமாற்றங்களையும் பார்த்திருக்கேன்.

எனக்கு ரொம்பப் பிடிச்ச இயக்குநர்கள் நிறைய பேர் இருக்காங்க. உதாரணத்துக்கு, தனுஷை எடுத்துக்கலாம். அவரு வெறும் நடிகன்னு நினைச்சு போய்ட்டேன். அவர் வெறும் நடிகன் எல்லாம் இல்லை.

அவருக்கு எல்லாமே தெரியுது. அவ்வளவு விஷயங்கள் தெரிஞ்ச நடிகர்கள் எல்லாம் குறைவுதான். நடிகர்கள் எல்லாம் பொறுப்பற்ற தன்மையில, சொன்னதை மட்டும் செஞ்சுட்டு, சோம்பேறிகளாதான் இருப்பாங்க.

ஆனா, தனுஷ் சாருக்கு லைட்டிங் தெரியும், எடிட்டிங் தெரியும், பாட்டுப் பாடத் தெரியுது, கதை எழுதத் தெரியுது, கவிதை எழுதத் தெரியுது. அதனால, நான் அவருக்கு கைத் தட்டுறேன், ரசிக்குறேன், மரியாதை தர்றேன்.

அது மாதிரி இயக்குநர்கள் நிறைய பேர் இன்னைக்கு இருக்காங்க. நிறைய படங்கள் என்னைத் திரும்பிப் பார்க்க வைக்குது, யோசிக்க வைக்குது. அது ஒவ்வொரு காலத்துக்கும் வந்துட்டேதான் இருக்கும்" என்றார்.

Sattamum Needhiyum: "என்னை Vijayakanth கூட compare பண்றதை ஏத்துக்கவே முடியாது" - Actor Saravanan
Read Entire Article