ARTICLE AD BOX
'புதிய நம்பிக்கை!'
சென்னையின் மிகப்பெரிய தலைவலியை போக்கும் விதமாக நம்பிக்கை ஒளியாய் மின்னியிருக்கிறார் ஷேக் ரஷீத். கான்வேக்கு பதில் ஓப்பனராக இறங்கி அறிமுகப் போட்டியிலேயே துடிப்புமிக்க ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறர். யார் இந்த ஷேக் ரஷீத்?
ஷேக் ரஷீத்'பின்னணி!'
ஷேக் ரஷீத்துக்கு வயது 20 தான். ஆந்திராவின் குண்டூரைச் சேர்ந்தவர். 2023 சீசனில் இருந்தே சென்னை அணியில் இருக்கிறார். சமீபத்திய மெகா ஏலத்திலும் அவரை மீண்டும் வாங்கி வந்தார்கள். கடந்த 2 சீசன்களாக அவரை ஒரு போட்டியில் கூட லெவனில் எடுக்கவில்லை. பென்ச்சிலேயேதான் இருந்தார்.
அவ்வபோது சப்ஸ்டிடியூட் வீரராக மட்டும் இறக்கி ஊறுகாயாகத் தொட்டுக் கொள்வார்கள். டாப் ஆர்டரில் ஆடக்கூடிய திறமையான இளம் பேட்டரை இப்படி வீணாக்குகிறார்களே எனும் ஆதங்கம் அனைவருக்கும் இருந்தது. 2022 இல் உலகக்கோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியின் முக்கியமான வீரராக இருந்தார்.
ஷேக் ரஷீத் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் 94 ரன்களை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவியிருந்தார். லேட்டஸ்ட்டாக நடந்த ஆந்திர ப்ரீமியர் லீகில் 6 இன்னிங்ஸில் 297 ரன்களை எடுத்திருந்தார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களில் டாப் 5 க்குள் இருந்தார்.
'சென்னையின் பிரச்சனை!'
நடப்பு சீசனில் சென்னை அணிக்கு ஓப்பனிங் செட்டே ஆகவில்லை. ரச்சின் - திரிபாதி, ரச்சின் - கான்வே என இரண்டு ஓப்பனிங் கூட்டணியை சென்னை அணி பயன்படுத்தியிருந்தது. இரண்டு கூட்டணியுமே சென்னைக்கு நல்ல ரிசல்ட்டை கொடுக்கவில்லை. தோல்விகளும் தொடர்ந்தது.
Shaik Rasheedஎன்ன செய்வதென விழிபிதுங்கி நின்ற நிலையில்தான் தங்கள் அணியில் மூன்றாண்டுகளாக இருக்கும் ஷேக் ரஷீத்தை ஓப்பனிங் இறக்கலாம் எனும் முடிவுக்கு சென்னை வந்தது. ஷேக் ரஷீத்தை லெவனில் எடுக்க பரீசிலித்து வருகிறோம் என பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங்கும் நேற்று கூறியிருந்தார்.
Dhoni : 'ரசிகர்களின் அன்பால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன்' - தோனி நெகிழ்ச்சி'நம்பிக்கையளித்த ஷேக் ரஷீத்!'
இன்று ஷேக் ரஷீத்தின் பெயர் லெவனில் இருந்தது. கான்வேக்கு பதில் ரஷீத் ஓப்பனராக்கப்பட்டிருந்தார். ரஷீத்தைச் சுற்றி அத்தனை இலகுவான சூழல் இல்லை. அணி தோல்விப்பாதையில் இருக்கிறது. கான்வேயின் இடத்தை இவர் நிரப்ப வேண்டும். எல்லாவற்றுக்கும் மேல் அணி எதிர்பார்க்கும் மொமண்டமையும் இவர் வழங்க வேண்டும்.
இத்தனை விஷயங்கள் ரஷீத்தை சுற்றி அழுத்திக்கொண்டிருந்தது. ஆனாலும் ரஷீத் நிதானமாக இருந்தார். ஒன்றிரண்டு பந்துகளை பார்த்து ஆடிவிட்டு இரண்டாவது ஓவரிலிருந்து ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்தார். ஆகாஷ்தீப் வீசிய அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிக்களை அடித்தார். ஷர்துல் தாகூர் வீசிய அடுத்த ஓவரில் இரண்டு பவுண்டரிக்கள்.
Shaik Rasheedஎல்லாமே க்ளீன் ஹிட்கள். ஷேக் ரஷீத் அடித்தது என்னவோ 27 ரன்கள்தான். ஆனால், அணிக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தார். இந்த சீசனில் சென்னையின் ஓப்பனிங் கூட்டணி முதல் முறையாக அரைசதத்தைக் கடந்தது. அதேமாதிரி, பவர்ப்ளேயில் கிட்டத்தட்ட ஓவருக்கு 10 ரன்களை எடுத்திருந்தார்கள். இந்த மொமண்டம்தான் சென்னைக்குக் கிடைக்காமல் இருந்தது. அதையும் ஷேக் ரஷீத் ஏற்படுத்திக் கொடுத்தார்.
LSG vs CSK : தோனியின் தயக்கம்; பௌலரின் நம்பிக்கை - நிக்கோலஸ் பூரனை எப்படி வீழ்த்தியது சிஎஸ்கே?ஷேக் ரஷீத் சென்னையின் புதிய நம்பிக்கை. அவரை அப்படியே பிடித்துக் கொள்ளுங்கள் CSK!

8 months ago
8







English (US) ·