Shane Warne: `ஷேன் வார்னேவின் மரணத்திற்கு இதுதான் காரணம்?' - வெளியான அதிர்ச்சி தகவல்

8 months ago 8
ARTICLE AD BOX

ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே கடந்த 2022-ம் ஆண்டு மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தியிருந்தார். தனது நண்பர்களுடன் தாய்லாந்துக்குச் சென்றிருந்த அவருக்கு அங்கு மாரடைப்பு ஏற்பட்டது.

இவரின் மரணம் தொடர்பாக பிரிட்டிஷ் பத்திரிகையான டெய்லி மெயில் அதிர்ச்சியான தகவலை தற்போது வெளியிட்டிருக்கிறது.

Shane WarneShane Warne

ஷேன் வார்னே உடல் இருந்த இடத்தின் அருகில் காம்க்ரா (வயாகரா கன்டென்ட்கள் இருக்ககூடிய மாத்திரை) மாத்திரை பாட்டில் கண்டறியப்பட்டிருக்கிறதாம்.

வழக்கை விசாரித்த சீனியர் காவல் அதிகாரி ஒருவர் அங்கிருந்த காவல் அதிகாரியிடம் அந்த மாத்திரை பாட்டிலை அப்புறப்படுத்தச் சொல்லியிருக்கிறார்.

Shane Warne: `மரபுகளில் திளைத்து மரபுகளை மீறிய வீரன்!' - நினைவுகளில் வாழும் வார்னே!

பெயர் தெரிவிக்க விரும்பாத சம்பவ இடத்திலிருந்த காவல் அதிகாரி ஒருவர், `` இந்த விஷயம் மிகவும் சென்சிடிவ்வானது. எங்களின் சீனியர்கள் அந்த பாட்டிலை அப்புறப்படுத்த உத்தரவிட்டார்கள். இந்த உத்தரவு மேலிடத்திலிருந்து வந்திருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் சீனியர் அதிகாரிகள் தங்களுடைய நாட்டின் முக்கியமானவராக இருக்கும் ஷேன் வார்னேவைப் பற்றி இப்படியான ஒரு தகவல் பரவுவதை அவர்கள் விரும்பவில்லை.

Shane WarneShane Warne

அதனால்தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்தது. இது மிகவும் சென்சிடிவ் விஷயமாக இருப்பதால் எவரும் வார்னேவின் அறையில் மாத்திரைகள் இருந்ததை உறுதிபடுத்தமாட்டார்கள். ஒரு பாட்டிலில் சில மாத்திரைகள் இருந்தது.

வார்னே எத்தனை மாத்திரைகள் எடுத்துக் கொண்டார் என்றெல்லாம் எங்களுக்கு தெரியவில்லை. சம்பவ இடத்தில் வாந்தியும் எடுத்ததற்கான அடையாளமும் இரத்தமும் இருந்தது." என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறியிருக்கிறார்.

"ஒரு சிறந்த நண்பர் என்ற வகையில் உங்களை மிஸ் செய்கிறேன்!"- ஷேன் வார்னே குறித்து சச்சின் உருக்கம்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article