Shreyas Iyer: `இன்னும் எதுவும் முடியல...' - ஸ்ரேயஸ் ஐயர் நம்பிக்கை

7 months ago 8
ARTICLE AD BOX

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையேயான முதல் தகுதிச்சுற்றுப் போட்டி நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வென்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தது.

RCB vs PBKSRCB vs PBKS

இந்நிலையில் போட்டிக்குப் பிறகு தோல்வி குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

RCB : '8 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப்போட்டியில் RCB!' - பஞ்சாபை எப்படி வீழ்த்தியது?

அவர் பேசியதாவது, ''இந்த நாளை மறக்க முடியாது. நாங்கள் என்னென்ன தவறுகளைச் செய்தோம் என்பதை அலச வேண்டும். நாங்கள் வேக வேகமாக நிறைய விக்கெட்டுகளை இழந்தோம். நாங்கள் பிட்ச்சை சரியாக கணிக்கவில்லை. நான் வகுத்து வைத்த திட்டங்களின் மீது எனக்கு எப்போதுமே சந்தேகம் கிடையாது. மைதானத்துக்கு வெளியே எல்லாவற்றையும் சரியாகத்தான் திட்டமிட்டு வைத்திருந்தோம்.

Shreyas IyerShreyas Iyer

திட்டங்களை முறையாக செயல்படுத்துவதில்தான் பிரச்னை. பௌலர்களைக்கூட நான் குறை சொல்லமாட்டேன். அவர்கள் போட்டியிடும் அளவுக்கான ரன்களை நாங்கள் எடுக்கவில்லை. சூழலுக்கு ஏற்ப நாங்கள் பேட்டிங் ஆடியிருக்க வேண்டும். நாங்கள் இந்தப் போட்டியில் தோற்றுவிட்டோம். ஆனால், இன்னும் எதுவும் முடியவில்லை. எங்களின் போராட்டக்குணம் அப்படியேத்தான் இருக்கிறது.' என்றார்.

RCB: `விண்வெளி நாயகா!'- அணியின் ஒற்றை நம்பிக்கை; கோலிக்காக ஜெயிச்சிட்டு வாங்க RCB
Read Entire Article