Shreyas Iyer: 'எதிர் டீம் கேப்டனை வச்சுக்கிட்டு அதை கேட்காதீங்க!- பிரஸ் மீட்டீல் ஸ்ரேயாஸ் ஐயர் ஜாலி

6 months ago 8
ARTICLE AD BOX

ஐ.பி.எல் இறுதிப்போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகளுக்கிடையேயான இறுதிப்போட்டி இன்று அஹமதாபாத்தில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், நேற்று போட்டிக்கு முன்பான பத்திரிகையாளர் சந்திப்பு நடந்திருந்தது. ரஜத் பட்டிதர், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறியிருந்தனர். அதில் பஞ்சாப் அணி குறித்து ஸ்ரேயாஸ் சில முக்கியமான விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.

RCB vs PBKSRCB vs PBKS

'ஸ்ரேயாஸ் ஐயர் பத்திரிகையாளர் சந்திப்பு!'

அவர் பேசியதாவது, ''இறுதிப்போட்டியில் ஆட சுவாரஸ்யமாகவும் ஆர்வமாகவும் காத்திருக்கிறேன். பெங்களூரு கடுமையான சவாலை அளிக்கக்கூடிய அணிதான். ஒரு கேப்டனாக அணியிலுள்ள வீரர்களின் சிறப்பான செயல்பாட்டை வெளிக்கொணர்வதுதான் முக்கிய கடமை என நினைக்கிறேன். எங்களின் அணியில் பயமே இல்லாமல் ஆடக்கூடிய நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.

அவர்கள் முதல் பந்திலிருந்தே ஆதிக்கமாகவும் ஆடுகிறார்கள். ரிக்கி பாண்டிங் ஒரு அற்புதமான பயிற்சியாளர். அவர் எல்லா வீரர்களையும் ஒரே மாதிரிதான் நடத்துவார். நம்முடைய முழுத்திறனையும் வெளிக்காட்டுவதற்கான சுதந்திரத்தை அவர் கொடுப்பார். வெற்றி தோல்விகளைப் பொறுத்து அவரின் அணுகுமுறை மாறாது. போட்டிகளுக்கு முன்பான அவரின் உரைகள் அத்தனை ஊக்கத்தை அளிக்கும். சஹாலின் உடற்திறனை பற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை. நேற்றைய போட்டியை (குவாலிபையர் 2) முடித்துவிட்டு நான்கு மணி நேரம்தான் தூங்கினேன். என்னுடைய அறையிலிருந்து நேராக இங்குதான் வருகிறேன்.' என்றார்.

Rajat Patidar - Shreyas IyerRajat Patidar - Shreyas Iyer

மேலும் அவரிடம் பும்ராவின் யார்க்கருக்கு எதிராக அப்படி ஒரு ஷாட்டை எப்படி ஆடினீர்கள்? என ஒரு பத்திரிகையாளர் கேட்க, 'இறுதிப்போட்டியில் ஆடப்போகும் எதிரணியின் கேப்டனை வைத்துக் கொண்டே இதை கேட்கிறீர்களே. நீங்கள் தனியாக வாருங்கள். உங்களிடம் சொல்கிறேன்.' என நகைச்சுவையாக கூறினார்.

Shreyas Iyer : `ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன் இல்லை; தலைவன்!' - ஏன் தெரியுமா?
Read Entire Article