ARTICLE AD BOX
ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் பெங்களூரு அணி பஞ்சாபை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வென்றிருக்கிறது.
ஐ.பி.எல் வரலாற்றில் பெங்களூரு அணி முதல் முறையாக சாம்பியனாகியிருக்கிறது.
Shreyas Iyer - RCB vs PBKSஸ்ரேயாஸ் ஐயர் பேசுகையில், " ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. ஆனால், நாங்கள் இவ்வளவு தூரம் வந்த விதத்தையும் எங்கள் வீரர்கள் ஆடிய விதத்தையும் எண்ணி பெருமைகொள்கிறேன்.
மும்பையுடன் ஆடிய விதத்தை வைத்து 200 ரன்கள்தான் இங்கே வெற்றி பெறுவதற்கான ஸ்கோர் என நினைத்தேன். அவர்கள் 190 ரன்களைத்தான் அடித்திருந்தார்கள்.
ஆனாலும் அவர்களின் பௌலிங் சிறப்பாக அமைந்துவிட்டது. அணியின் ஒவ்வொரு வீரரை நினைத்தும் பெருமைக் கொள்கிறோம். குறிப்பாக எங்கள் அணியில் நிறைய இளம் வீரர்கள் இருக்கிறார்கள்.
பலருக்கும் இதுதான் முதல் சீசனாக இருந்தது. அவர்கள் பயமே அறியாமல் ஆடியிருந்தார்கள். நிறைய வீரர்கள் சரியான சமயத்தில் தாமாக முன்வந்து போட்டியை வெல்ல பங்களித்திருந்தார்கள்.
Shreyas Iyer - RCB vs PBKSஅதை பாசிட்டிவ்வாக நினைக்கிறேன். இளம் வீரர்களை சுற்றி அவர்களுக்கு ஏற்ற வகையில் திட்டங்களைத் தீட்டி அடுத்த சீசனில் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும். பயிற்சியாளர் குழுவுக்கும் நிர்வாகத்துக்கும் உரிமையாளர்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
எங்களின் வேலை இன்னுமே பாதிதான் முடிந்திருக்கிறது. அடுத்த ஆண்டு மீண்டும் வந்து கோப்பையை வெல்ல வேண்டும்." என நம்பிக்கையுடன் பேசினார்.

6 months ago
8







English (US) ·