Shreyas Iyer : 'ப்ளான்லாம் ரெடி... செயல்ல காட்டுறோம்!' - டாஸில் ஸ்ரேயாஸ் ஐயர் உறுதி!

6 months ago 8
ARTICLE AD BOX

'இறுதிப்போட்டியின் டாஸ்...'

ஐ.பி.எல் இன் இறுதிப்போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் அஹமதாபாத் மைதானத்தில் மோதவிருக்கின்றன. இந்தப் போட்டிக்கான டாஸ் நடந்து முடிந்திருக்கிறது. டாஸை பஞ்சாப் அணி வென்றிருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசப் போவதாக அறிவித்திருக்கிறார்.

Shreyas IyerShreyas Iyer

'இது இறுதிப்போட்டி...'

ஸ்ரேயாஸ் ஐயர் பேசியதாவது, 'நாங்கள் முதலில் பந்து வீசப்போகிறோம். என்னுடைய மனதுக்கும் உடலுக்கும் பாசிட்டிவ்வான எண்ணங்களை மட்டுமே கொடுக்க விரும்புகிறேன். எல்லா வீரர்களும் நல்ல நிலையில் இருக்கிறார். எவ்வளவு அமைதியாகவும் நிதானமாகவும் இருக்கிறீர்களோ அவ்வளவு நல்லது அதற்கேற்ப ரிசல்ட் கிடைக்கும் என வீரர்களிடம் சொல்லியிருக்கிறேன்.

இது மற்றுமொரு போட்டி என சொல்லமாட்டேன். இது இறுதிப்போட்டி. இறுதிப்போட்டியில் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடுவோம். ஏற்கனவே கோப்பையை வென்றதைப் போல கற்பனை (Visualisation) செய்திருக்கிறோம். மனதில் உள்ள திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் போதும்.' என்றார்.

RCB vs PBKSRCB vs PBKS

'இது மற்றுமொரு போட்டி...'

ரஜத் பட்டிதர் பேசியதாவது, 'நாங்களும் முதலில் பந்துவீசவே நினைத்தோம். பிட்ச் ப்ளாட்டாகத்தான் இருக்கிறது. இதுவரை நல்ல கிரிக்கெட்டையே ஆடியிருக்கிறோம். இது இறுதிப்போட்டிதான். பெரிய போட்டிதான். ஆனாலும் இதை மற்றொரு Away போட்டியாக மட்டுமே பார்க்கிறோம்.' என்றார்.

Read Entire Article