Shreyas Iyer: `மனமுடைந்து அழுதேன், என் மீதே கோபம்...' - மனம் திறந்த ஷ்ரேயஸ்!

8 months ago 8
ARTICLE AD BOX

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது எமோஷனலாக இருந்தது குறித்து மனம் திறந்துள்ளார்.

இந்தியா சாம்பியன்ஸ் டிராபி தொடரை அபாரமாக விளையாடி கைப்பற்றியது. அணியின் வெற்றிக்கு, முதுகெலும்பாக செயல்பட்டார் ஷ்ரேயஸ் ஐயர்.

ஆனால் துபாயில் அணியுடன் பயிற்சியைத் தொடங்கியபோது, மனமுடைந்து அழுததாகவும் தன்மீது தானே கோபமாயிருந்ததாகவும் கூறியுள்ளார் ஷ்ரேயஸ்!

ஷ்ரேயஸ் ஐயர்

இந்தியாவின் முதல் போட்டி வங்காள தேசம் அணிக்கு எதிராக நடைபெற்றது. அந்த போட்டிக்கான நெட்ஸ் பயிற்சியில் பேட்டிங் செய்தபோது தன்னால் சரியான முறையில் பேட்டிங் ரிதத்தைக் கண்டறிய முடியவில்லை என்பதால் மனமுடைந்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடி ஃபார்மில் இருந்திருந்தாலும் (3 போட்டிகளில் 181 ரன்கள் விளாசியிருந்தார்) ஷ்ரேயஸுக்கு கடினமான நாட்களாக அவை இருந்துள்ளது.

தொடர்ந்து பயிற்சி செய்தேன், ஆனாலும்...

இதுகுறித்து, "நான் நெட்ஸில் பேட்டிங் செய்தது சரியாக போகவில்லை என்பதனால் என் மீது நானே கோபமடைந்தேன், அழத் தொடங்கிவிட்டேன். நான் அவ்வளவு எளிதில் அழுபவனில்லை என்பதால் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது" எனப் பேசியுள்ளார்.

Shreyas

மேலும் அவர், "நான் என்னுடைய ஃப்லோவை அப்படியே தக்கவைக்க முடியும் என நம்பினேன். ஆனால் விக்கெட்ஸ் வித்தியாசமாக இருந்தன. முதல் நாளிலேயே பிட்சுக்கு ஏற்றபோல தகவமைத்துக்கொள்வது கடினமான காரியம். பயிற்சிகள் முடிந்த பின்னும் நான் தொடர்ந்து பயிற்சி செய்தேன். ஆனாலும் என்னால் சிறப்பாக விளையாடமுடியவில்லை." என்றும் கூறியுள்ளார்.

வங்காளதேசத்துக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட முடியவில்லை என்றாலும் அடுத்தடுத்த போட்டிகளில் தன் பலத்தை நிரூபித்தார் ஷ்ரேயஸ். பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அரைசதம் விளாசினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 45 ரன்களும், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 48 ரன்களும் எடுத்து தொடரில் இந்தியாவுக்கு அதிக ரன் குவித்த பேட்டராக ஜொலித்தார்.

Sarpanch Saab's passion for the game...

Watch the full heartfelt conversation between Shreyas Iyer and Sahiba Bali on our YT channel and Punjab Kings App. pic.twitter.com/t1PBDtCY6M

— Punjab Kings (@PunjabKingsIPL) April 7, 2025

Shreyas in IPL 2025

ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வழிநடத்தும் ஷ்ரேயஸ், குஜராத் டைடன்ஸுக்கு எதிராக 97 ரன்கள், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிராக 52 ரன்கள் என சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்.

கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்களில் விக்கெட்டை இழந்ததும் குறிப்பிடத்தக்கது. இன்று நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போடியில் மீண்டும் சிறப்பாக பேட்டிங் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

BCCI ஒப்பந்தங்கள்: ஷ்ரேயஸ் ஐயர் ரூட் கிளியர்; A+ல் விராட்டுக்கு இடம் உண்டா?
Read Entire Article