ARTICLE AD BOX
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையைத் தேர்வு செய்து கௌரவித்து வருகிறது. அந்தவகையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைப் பரிந்துரைப் பட்டியலில் இந்தியாவின் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் நியூசிலாந்து வீரர்களான ஜேக்கப் டபி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஸ்ரேயஸ் ஐயர்இந்நிலையில் மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரரை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் மாத சிறந்த வீரராக இந்தியாவின் ஸ்ரேயஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
இதேபோல் சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் அமெரிக்காவின் சேத்னா பிரசாத் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான அன்னபெல் சதர்லேண்ட், ஜார்ஜியா வோல் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இதில் மார்ச் மாத சிறந்த வீராங்கனையாக ஜார்ஜியா வோல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
ஸ்ரேயாஸ் ஐயர்கடந்த மாதத்தில் நடந்திருந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஸ்ரேயஸ் ஐயர் மிகச்சிறப்பாக ஆடியிருந்தார். இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்த அந்தத் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் 243 ரன்களை அடித்திருந்தார். இந்தியா சார்பில் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன்களை எடுத்த வீரராக ஸ்ரேயாஸ் ஐயரே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

8 months ago
8







English (US) ·