ARTICLE AD BOX
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இந்தத் தொடரின் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் காயம் அடைந்தார்.
இந்தச் சம்பவம், அக்டோபர் 25, 2025 அன்று, சிட்னியில் நடந்த அந்தப் போட்டியின் போது ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை கேட்ச் பிடிக்க முயன்றபோது ஏற்பட்டது.
அதில் ஸ்ரேயஸின் விலா எலும்பில் அடிபட்டது. இந்தக் காயத்தால், ஸ்ரேயஸ் உடனடியாக சிட்னியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரேயஸ் ஐயருக்கு ஏற்பட்ட காயம் குறித்து பிசிசிஐ அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் ICU-வில் ஷ்ரேயாஸ் ஐயர்! - என்ன நடந்தது?அதில், "இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்யும் போது ஸ்ரேயஸ் ஐயருக்கு இடது விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.
அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ ஸ்கேனில் அவரது விலா எலும்பில் தசைநார் கிழிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
Medical update on Shreyas Iyer. Details #TeamIndia | #AUSvIND https://t.co/8LTbv7G1xy
— BCCI (@BCCI) October 27, 2025தற்போது அவர் சிகிச்சையில் உள்ளார். நன்றாக குணமடைந்து வருகிறார். சிட்னி மற்றும் இந்தியாவில் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை செய்து, பிசிசிஐ மருத்துவக் குழு அவரது காயத்தைக் கண்காணித்து வருகிறது.
பிசிசிஐ மருத்துவக் குழுவைச் சேர்ந்த மருத்துவர்கள் சிட்னியிலேயே தங்கி, ஸ்ரேயஸின் தினசரி முன்னேற்றத்தை கண்காணித்து வருகிறார்கள்" என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது.
Shreyas Iyer: "எங்களை மக்கள் ரோபோக்களாகப் பார்க்கிறார்கள்" - சிகிச்சை வலி குறித்து ஸ்ரேயஸ் உருக்கம்
2 months ago
4







English (US) ·