Shruti Haasan: "நான் திருமணத்தை மதிக்கிறேன்; ஆனால்..." - நடிகை ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!

5 months ago 6
ARTICLE AD BOX

நடிகை ஸ்ருதி ஹாசன் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்க முடிவு செய்தது குறித்து சமீபத்தில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்..

பாட்காஸ்டரான யூடிப்பர் ரன்வீர் அலாபாடியுடன் நடிகை ஸ்ருதி ஹாசன் பாட்காஸ்டில் உரையாடினார். அதில், ”திருமணம் என்ற எண்ணத்தால் நான் பயந்துள்ளேன். தனது அடையாளத்தை ஒரு சிறிய காகிதத்துடன் இணைக்கக் கூடாது என்று நினைக்கிறேன்.

திருமணம் சொல்லும் கொள்கைகளை நான் மதிக்கிறேன். ஆனால் அவற்றை சட்ட ஆவணமாக்கும் போது அது எனக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன்.

Shruti Haasan - Vinveli NayagaShruti Haasan

ஒரு காலத்தில் திருமணம் செய்ய இருந்த நான், அந்த உறவின் இணக்கமின்மை காரணமாக காதல் முறிந்தது. திருமணம் என்பது இரண்டு நபர்களை மட்டும் பற்றியது அல்ல. அது குழந்தைகள், எதிர்காலம் வாழ்நாள் பொறுப்பைப் பற்றியது" என்று பேசியிருந்தார்.

அது மட்டும் இல்லாமல் தாய்மை குறித்த தனது பார்வையையும் ஸ்ருதி ஹாசன் அந்த பாட்காஸ்டில் பகிர்ந்து கொண்டார்.

ஸ்ருதி ஹாசன் கூறியதாவது, "நான் எப்போதும் ஒரு தாயாக இருக்க விரும்புகிறேன். ஆனால் பிறக்கும் குழந்தையை ஒற்றைப் பெற்றோராக வளர்க்க விரும்பவில்லை" என்று கூறியிருக்கிறார்.

ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு இரண்டு அன்பான, அர்ப்பணிப்புள்ள பெற்றோர்கள் தேவைப்படுவதாக, இன்றைய சமூகத்தில் இருக்கும் பிரச்னையைச் சூசகமாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், "எதிர்காலத்தில் ஒரு குழந்தையைத் தத்தெடுப்பது ஒரு விருப்பமாக இருக்கலாம்” என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

தற்போது ஸ்ருதி ஹாசன், தனது வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவர இருக்கும் கூலி படத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Samantha: "நான் மேடைகளில் கண்கலங்கி எமோஷனல் ஆகிறேனா...” - வீடியோ வெளியிட்ட நடிகை சமந்தா!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article