Simran: "இன்று எங்களை விட உயரமாக நிற்கிறாய்!" - தன்னுடைய மூத்த மகன் குறித்து நடிகை சிம்ரன்

6 months ago 8
ARTICLE AD BOX

சிம்ரன், இந்தாண்டின் முதல் பாதி முடிவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்கள் மூலமாக அதிரடி காட்டிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் சசிகுமாருடன் இவர் நடித்திருந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருந்தது. இதைத் தாண்டி, அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரத்தில் களமிறங்கி பலரையும் சப்ரைஸ் செய்திருந்தார்.

Simran's Elder Son AdheepSimran's Elder Son Adheep

அதுமட்டுமல்ல, 'எதிரும் புதிரும்' படத்தில் சிம்ரன் நடனமாடியிருக்கும் 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடலை 'குட் பேட் அக்லி' படத்தில் ப்ரியா வாரியரை வைத்து ரீ கிரியேட் செய்த காட்சிகளெல்லாம் இணையத்தில் அதிரடியாக வைரலாகின.

தனக்கு குடும்பம் மிகவும் முக்கியம், அவர்களுக்காக எப்போதுமே தனியாக நேரத்தைக் கொடுப்பேன் என்பதை தன்னுடைய பல பேட்டிகளில் சிம்ரன் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்திய விகடன் பிரஸ் மீட்டிலும் தன்னுடைய கணவர், குழந்தைகள் பற்றி பல விஷயங்களைப் பகிர்ந்திருந்தார். தற்போது, சிம்ரனின் மூத்த மகனான அதீப் தனது பள்ளிப் படிப்பை முடித்திருக்கிறார்.

அவருடைய பட்டமளிப்பு விழாவில் நடிகை சிம்ரன் பங்கேற்று, அந்த நிகழ்வு ஏற்படுத்திய மகிழ்ச்சி குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தப் பதிவில் சிம்ரன், "எங்களின் கைகளில் உன்னுடைய சிறிய கைகள் இருந்தன. இன்று பட்டமளிப்பு உடையில் எங்களை விட உயரமாக நிற்கிறாய்! நீ எங்கள் இதயங்களை பெருமையும் வியப்பும் நிரப்பும் வகையில் வளர்ந்திருக்கிறாய்! வாழ்த்துக்கள் ஓடோ, நீ எங்களை மிகவும் பெருமைப்படுத்தியிருக்கிறாய்!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

சமீபத்தில் நடிகர் சூர்யாவின் மகளும், தனுஷின் மகனும் அவர்களுடைய பள்ளிப் படிப்பை முடித்து பட்டத்தைப் பெற்றிருந்தனர். அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.
Read Entire Article