ARTICLE AD BOX
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் மதராஸி.
இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மணி வசந்த் மற்றும் வித்யுத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் சினிமா எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், ``ரூ.1000 கோடி என்ற இலக்கை மட்டும் மனதில் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியாது."
நான் ஏற்கெனவே இதைச் சொல்லியிருக்கிறேன். நாங்கள் 'அமரன்' திரைப்படத்தைத் தயாரிக்கும்போது, அது எவ்வளவு வசூல் செய்யும் என்பதைப் பற்றி நினைக்கவில்லை.
ஒரு படத்தின் தரத்தைத் தவிர, டிக்கெட் விலையைப் போன்ற வேறு சில காரணிகளும் இதில் முக்கியம். நான் டிக்கெட் விலையை அதிகரிப்பதை ஆதரிக்கவில்லை.
ஆனால், பெங்களூரு அல்லது மும்பையில் உள்ள டிக்கெட் விலைகள் போல் இங்கே இருந்திருந்தால், 'ஜெயிலர்' திரைப்படம் ரூ.800 கோடி அல்லது ரூ.1000 கோடியைக் கூட எளிதாகக் கடந்திருக்கும்.
தமிழ் சினிமா வட இந்திய சந்தைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம், பெரும்பாலான தமிழ் திரைப்படங்கள் நான்கு வாரங்களுக்கான ஓடிடி ஒப்பந்தத்தைச் செய்கின்றன.
ஆனால், மும்பையில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகள், ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி குறைந்தது எட்டு வாரங்களுக்குப் பிறகுதான் ஓடிடி-யில் வர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன.
சிவகார்த்திகேயன்இந்தச் சிக்கலால், 'அமரன்' திரைப்படம் வட இந்தியாவில் பரவலாகச் சென்றடையவில்லை. தமிழ் திரையுலகம் விரைவில் அந்த இலக்கை எட்டும்.
ஒருவரால் மட்டும் இதைச் செய்வது எளிதல்ல. ஆனால், தமிழ் சினிமா அந்த இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் ஒரு சில வருடங்களில் ரூ.1000 கோடி வசூல் என்ற சாதனை நிகழும் என்றும் நம்புகிறேன்" என்றார்.
Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·