ARTICLE AD BOX
கோலிவுட்டில் தனது கரியரில் மட்டுமல்லாது அஜித், விஜய் ஆகியோரின் கரியரிலும் மிக முக்கியான திரைப்படத்தைக் கொடுத்தவர் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா.
தொடர்ந்து `நியூ', `அன்பே ஆருயிரே' ஆகிய படங்களைத் தானே இயக்கி நடித்த எஸ்.ஜே.சூர்யா கடைசியாக 2015-ல் தானே நடித்து இசையமைத்த `இசை' படத்தை இயக்கியிருந்தார்.
குஷி படத்தில் இயக்குநராக எஸ்.ஜே.சூர்யாஅதன்பிறகு, 2016-ல் கார்த்திக் சுப்புராஜின் இறைவி படத்தில் நடிகராக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற எஸ்.ஜே.சூர்யா, அடுத்தடுத்து ஸ்பைடர், மெர்சல், மாநாடு, வதந்தி (வெப் சீரிஸ்), மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், வீர தீர சூரன் என நடிப்பில் தனக்கென தனி ட்ரேட்மார்க்கை உருவாக்கி நடிப்பில் படு பிஸியானார்.
ஆனாலும், அடுத்து எப்போது படம் இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்தது.
அதற்கு, கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அவரே பல நிகழ்ச்சிகளில் கூறிவந்தார்.
இந்த நிலையில் எஸ்.ஜே.சூர்யா, 10 வருடங்களுக்குப் பிறகு தான் இயக்கவிருக்கும் புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
இது குறித்து எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் தளப் பக்கத்தில், "தனது ட்ரீம் பிராஜெக்ட் `கில்லர்' மூலம் உங்களின் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மீண்டும் திரும்பியிருக்கிறார்.
இதில் கோகுலம் சினிமாஸ் கோகுலம் கோபாலன் சாருடன் இணைந்து பணியாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி.
உங்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் வேண்டும்" என்று பதிவிட்டு தயாரிப்பாளருடான புகைப்படத்தையும் ஷேர் செய்திருக்கிறார்.
மேலும், கில்லர்'ஸ் கேர்ள் என்று குறிப்பிட்டு அயோத்தி பட நடிகை ப்ரீத்தி அஸ்ரானி tag செய்யப்பட்டிருக்கிறார்.
Congrats to @iam_SJSuryah sir on making a directorial comeback. A storyteller we’ve always admired. Wishing you the very best sir. https://t.co/87oVYoXzgt
— Silambarasan TR (@SilambarasanTR_) June 27, 2025இவ்வாறிருக்க எஸ்.ஜே.சூர்யாவின் இந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்திருக்கும் நடிகர் சிலம்பரசன், "இயக்குநராக மீண்டும் வந்ததற்கு வாழ்த்துகள் எஸ்.ஜே.சூர்யா சார்.
நாங்கள் எப்போதும் மதிக்கும் ஒரு ஸ்டோரிடெல்லர்"என்று வாழ்த்தியிருக்கிறார்.
`வெற்றிமாறன் டு பிரேம்குமார்... 2 வருடம் 10 படங்கள்' - இயக்குநர் பட்டியலை வெளியிட்ட வேல்ஸ் நிறுவனம்!
6 months ago
7





English (US) ·