Smith: `ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறேன்’ - ஸ்டீவ் ஸ்மித் அறிவிப்பு

9 months ago 8
ARTICLE AD BOX

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அறிவித்துள்ளார். நேற்று இந்தியாவுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி அரை இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்ததை அடுத்து, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.

நேற்று துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி தோல்வியை தழுவியது. இதனால் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை ஆஸ்திரேலியா அணி நழுவ விட்டது. இந்தப் போட்டி முடிந்த பிறகு தன்னுடைய சக வீரர்களிடம் ஸ்டீவ் ஸ்மித் தான் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக கூறியுள்ளார்.

இருப்பினும் ஸ்டீவ் ஸ்மித் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடவுள்ளதாக ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2010 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக லெக் ஸ்பின்னிங் ஆல்ரவுண்டராக அறிமுகமான ஸ்மித் 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 43.28 சராசரியில் 5,800 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு அறிவிப்புக்கு பின் பேசிய ஸ்மித், “இது ஒரு சிறந்த பயணம். இந்த பயணத்தில் ஒவ்வொரு நிமிடத்தையும் நான் ரசித்தேன். இந்தப் பயணத்தில் பல அற்புதமான தருணங்களும், நினைவுகளும் இருக்கின்றன. என்னுடைய அற்புதமான அணி வீரர்களுடன் சிறந்த பயணத்தை நான் கொண்டுள்ளேன்” என்று கூறி உள்ளார்.

IND Vs AUS: `கம்மின்ஸ் மாதிரி சொல்வதற்கு என்னிடம் ஒன்றுமில்லை' - ஆஸி., கேப்டன் ஸ்மித்

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article