ARTICLE AD BOX
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டி துபாயில் வரும் ஞாயிறு அன்று நடைபெறவிருக்கிறது. இதில், 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் அரங்கேறிய அரையிறுதி ஆட்டங்களான இந்தியா vs ஆஸ்திரேலியா, நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா சூழலே நடப்பு சாம்பியன்ஸ் டிராபியிலும் நிகழ்ந்தது. இதில், ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தி அன்றைய அரையிறுதியில் தோற்றதற்குப் பழிதீர்த்து இப்போது இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
SA vs NZமறுபக்கம், நேற்று நடைபெற்ற நியூசிலாந்து vs தென்னாப்பிரிக்கா அரையிறுதியில், அன்று நிகழ்ந்ததில் எந்த மாற்றமும் இல்லாமல் மீண்டும் நியூசிலாந்தே வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருக்கிறது. நேற்றைய போட்டியில் கடைசி வரைப் போராடிய டேவிட் மில்லரின் சாதனை சதமும் வீணானது. முக்கியமான ஐ.சி.சி நாக்அவுட் போட்டிகளில் இவ்வாறு தொடர்ச்சியாகத் தென்னாப்பிரிக்கா தோல்வியடைவது அந்த அணி மீது மீண்டும் மீண்டும் விமர்சனங்களுக்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ராப் வால்டர், இதுபோன்ற ஒவ்வொரு போட்டியும் தாங்கள் பாடம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு என்றும், 2027-ல் தங்கள் நாட்டில் நடைபெறும் உலகக் கோப்பை தங்கள் இலக்கு என்று தெரிவித்திருக்கிறார்.
தோல்விக்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராப் வால்டர், ``நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம். நாங்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டியும், பாடம் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு. அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முயற்சித்து வருகிறோம். ஆனால், இன்று மிகப்பெரிய பாடம். நீங்களே அதை உணர்வீர்கள்.
தென்னாபிரிக்கா தலைமைப் பயிற்சியாளர் ராப் வால்டர்இருப்பினும், நிறைய விஷயங்களை நாங்கள் கற்றுக்கொண்டே இருக்கிறோம். நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட முடியும். ஒரு அணியாக நாங்கள் இன்னும் வளர்ந்து வருகிறோம். அதில் எந்த சந்தேகமுமில்லை. 2027-க்கு (ஒருநாள் உலகக் கோப்பை) இன்னும் இரண்டரை ஆண்டுகள் இருக்கிறது. அதன்மீது தான் எங்கள் இலக்கு இருக்கிறது." என்று கூறினார்.
SAvNz : 'கடைசி வரை போராடிய மில்லர்; வாரிச்சுருட்டிய சான்ட்னர்!' - இறுதிப்போட்டியில் நியூசிலாந்து
9 months ago
9







English (US) ·