ARTICLE AD BOX
ஹைதராபாத் vs கொல்கத்தா ஐபிஎல் நேற்று (மே 25) நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி கிளாசனின் சதம் மற்றும் ஹெட்டின் அரைசதத்தால் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் குவித்தது.
ஹைதராபாத் அணிஅடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 18.4 ஓவர்களில் 168 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியுடன் இந்த சீசனை நிறைவு செய்தது ஹைதராபாத். ஆட்ட நாயகன் விருதை சதமடித்த கிளாசான் வென்றார்.
வெற்றிக்குப் பிறகு பேசிய ஹைதராபாத் கேப்டன் கம்மின்ஸ், "இதுவொரு அற்புதமான ஃபினிஷிங். கடைசி சில ஆட்டங்களில் நிறைய விஷயங்கள் எங்களுக்கு கிளிக் ஆனது.
இப்படியான பேட்டிங்கைப் பார்க்கும்போது சற்று பயமாக இருந்தது. நம்முடைய வீரர்களின் திறமையைக் கொண்டு, முன்பு விளையாடியதை விட மோசமாக விளையாட முடியாது.
இறுதிப்போட்டிக்கு நாங்கள் முன்னேறியிருக்க வேண்டும். இந்த வருடம் அது முடியவில்லை.
பேட் கம்மின்ஸ்இதுபோன்ற பிட்ச்களில் அதிகபட்சமாக 250 முதல் 260 ரன்கள் எடுக்க வேண்டும். மற்ற பிட்ச்களில் குறைந்தபட்சம் 170 ரன்கள் எடுக்க வேண்டும்.
ஆனால், அதை நாங்கள் செய்யவில்லை. அணியைத் தேர்ந்தெடுக்கும்போது ஒவ்வொருவரையும் நாங்கள் கவனித்தோம்.
சிலருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. சிலரால் தங்களைப் பொருத்திக்கொள்ள முடியவில்லை. கிடைத்த அணியுடன் எங்களுக்கு மகிழ்ச்சிதான்.
சில வீரர்கள் காயங்களுடன் சொந்த ஊருக்குத் திரும்பினர். மொத்தமாக 20 வீரர்களை நாங்கள் பயன்படுத்தினோம்." என்றார்.
SRH vs KKR: "சில நேரங்களில் எனக்கு நானே நிறைய சவால் விடுவேன்" - ஆட்ட நாயகன் கிளாசன்
7 months ago
8







English (US) ·