Starc : 'ராஜஸ்தான் அணியின் முடிவு எனக்கு பெரிய சர்ப்ரைஸ்!' - சூப்பர் ஓவர் `ஸ்டார்’ ஸ்டார்க்

8 months ago 8
ARTICLE AD BOX

'டெல்லி வெற்றி!'

டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி டெல்லியில் நடந்திருந்தது. சூப்பர் ஓவர் வரை சென்ற இந்தப் போட்டியை டெல்லி அணி வென்றிருந்தது. யாஷஸ்வி ஜெய்ஸ்வால், சாம்சன், நிதிஷ் ராணா போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட ராஜஸ்தான் அணி வெற்றியை நோக்கிதான் முன்னேறியது.

Delhi CapitalsDC

டெத் ஓவரில் ஸ்டார்க் துல்லியமான யார்க்கர்களை இறக்கிதான் டெல்லி அணியை மீண்டும் போட்டிக்குள் கொண்டு வந்தார். ஸ்டார்க்கின் யார்க்கர்கள்தான் டெல்லியை வெல்ல வைத்தது. ஸ்டார்க்குக்குதான் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

'ஸ்டார்க்கின் பேச்சு!'

விருதை வழங்கிவிட்டு அவர் பேசியதாவது, 'நான் ஒரு தெளிவான திட்டத்துடனேயே பந்துவீச வந்தேன். அந்தத் திட்டத்தை சரியாக செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கையும் எனக்கு இருந்தது. சில சமயங்களில் நாம் நினைப்பதெல்லாம் நடந்துவிடும். அதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். இது ஒரு அற்புதமான போட்டி. நாங்கள் வென்றதில் மகிழ்ச்சி. நான் நீண்ட காலமாக கிரிக்கெட் ஆடி வருகிறேன்.

Mitchell Starc : ஸ்டார்க் தீயாய் பாய்ச்சிய யார்க்கர்கள்; சூப்பர் ஓவரில் போட்டியை இழந்த ராஜஸ்தான்

நான் எப்படி வீசுவேன் என எல்லாருக்குமே தெரியும். ஆனால், நான் என்னுடைய திட்டங்களை சரியாக செயல்படுத்தினால் நல்ல ரிசல்ட்டை கொடுக்க முடியும் என்பது எனக்கு தெரியும். நான் வீசும் ஆங்கிள்களை தெரிந்தும் ராஜஸ்தான் அணி இரண்டு இடது கை பேட்டர்களை இறக்கியது சர்ப்ரைஸாக இருந்தது. இளமை மற்றும் அனுபவம் என இரண்டும் கலந்த கலவையாக டெல்லி அணி இருக்கிறது.

StarcStarc

அக்சர் எங்களை மிகச்சிறப்பாக வழிநடத்தி வருகிறார். குல்தீப் சிறப்பாக வீசுகிறார். ராகுலும் ஸ்டப்ஸூம் அனுபவமிக்க வீரர்களாக கலக்குகின்றனர். தொடர்ந்து வெல்வதால் ஒரு அணியாக மகிழ்ச்சியாக இருக்கிறோம்.' என்றார்.

ஸ்டார்க்கின் பௌலிங்கை பற்றிய உங்களின் கருத்துகளை கமெண்ட் செய்யுங்கள்.

Read Entire Article