STR 49: சம்பளப் பிரச்னையால் சிம்பு - வெற்றிமாறன் படம் தொடங்குவதில் சிக்கலா? உண்மை என்ன?

4 months ago 6
ARTICLE AD BOX

கடந்த சில நாட்களாக வெற்றிமாறன், சிலம்பரசன் படம் டேக் ஆஃப் ஆவதில் சிக்கல் என்றும், இன்னமும் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கின்றது என்றும் பல தகவல்கள் உலா வருகின்றன.

andreaandrea

தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படம், 'எஸ்.டி.ஆர்.49'. இந்தக் கூட்டணி இணைந்தது எப்படி என்று சில வாரங்களுக்கு முன்னரே தெரிவித்திருந்தோம். இந்தப் படத்தில் சிலம்பரசன் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார்.

அதில் ஒன்று இளமையான சிம்பு. வட சென்னை பின்னணியில் உருவாகும் கதை இது. இதில் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் இவர்களுடன் இயக்குநர் நெல்சன் எனப் பலரும் நடிக்கின்றனர். படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்றின் ஷூட்டிங்கையும் படமாக்கினார்கள்.

simbusimbu
STR: ``கமல் சார் நடித்துக் காட்டிய 7 பேர் காட்சி; மிரண்டு விட்டேன்"- பிரமித்த சிலம்பரசன்

இரண்டு ஷெட்யூல்களாக நடந்த இந்த புரொமோ ஷூட்டின் முதல் ஷெட்யூல் சென்னை எழும்பூரில் உள்ள மியூசியம் ஒன்றில் நடந்தது. இரண்டு நாள்கள் நடந்த அதன் படப்பிடிப்பில் சிம்பு, இயக்குநர் நெல்சன் மற்றும் ஏராளமான துணை நடிகர்கள் பங்கேற்றனர்.

வெற்றிமாறன்வெற்றிமாறன்

இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் சிம்பு நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டன. வளசரவாக்கம் பகுதியில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கினார்கள். இந்நிலையில்தான் இந்தப் படம் டிராப் என்றும், சிம்பு சம்பளப் பிரச்னை காரணமாகப் படத்திலிருந்து விலகுகிறார் என்றும் செய்திகள் உலா வருகின்றன.

இது குறித்து கோடம்பாக்கத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள்.

STR 49: `அவர் இமேஜ் பாதிக்காம இருக்கணும்' - சிம்பு சொன்ன கண்டிஷன்; சந்தானம் இணைந்து இப்படித்தான்

''படம் குறித்து வெளிவரும் தகவல்கள் உண்மையில்லை. நிஜத்தில் படத்தின் புரோமோ வீடியோவிற்கான ஷூட்டிங் நிறைவடைந்து விட்டன. எதிர்பார்த்ததை விட, படத்திற்கான ஆவலைத் தூண்டும் விதத்தில் புரொமோ ஷூட் இருக்க வேண்டும் என்பதற்காக கிராஃபிக்ஸ் மற்றும் வி.எஃப்.எக்ஸ் வேலைகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்த புரொமோவை யூடியூப்பில் பதிவேற்றாமல், திரையரங்கிலேயே நேரடியாகக் கொண்டு வரலாம் என எண்ணுகின்றனர். வி.எஃப்.எக்ஸ் வேலைகள் திட்டமிட்டபடி 'கூலி' வெளியீட்டுத் தினத்திற்கு முன்னரே நிறைவு பெற்றால், 'கூலி' திரைக்கு வரும் அன்றே புரோமோவையும் கொண்டு வரும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்கள். அப்படியில்லை என்றால், இம்மாத இறுதிக்குள் ரிலீஸ் ஆகிவிடும் என்கின்றனர்.

நெல்சன்நெல்சன்

இன்னொரு விஷயம், படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளதால், மேக்கிங்கிலும் பிரமாண்டம் காட்ட உள்ளனர். படத்திற்கான பட்ஜெட்டும் பிரமாண்டமாகியிருக்கிறது என்ற பேச்சு இருக்கிறது. அதைப் போல், படப்பிடிப்பு அடுத்த மாதம் செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் தொடங்கவும் திட்டமிட்டு வருகின்றனர்.

படப்பூஜையும் ஆரம்பித்த அன்றே, படப்பிடிப்பும் தொடங்கும் என்கின்றனர். இந்த இடைவெளியில் சிம்புவும் பத்து கிலோ எடையைக் குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். ஆக, படம் திட்டமிட்டபடி நடக்கும்.'' என்கின்றனர்.

Simbu: `நீங்கள் யார்-னு கேட்டுட்டாரு; அதை மறக்கவே முடியாது' - கோலி பற்றி சுவரஸ்யம் பகிர்ந்த சிம்பு

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article