STR 49: வெற்றிமாறன், சிலம்பரசன் படப்பிடிப்பில் இயக்குநர் நெல்சன்; மற்ற நடிகர்கள் யார், யார்?

6 months ago 7
ARTICLE AD BOX

இயக்குநர் வெற்றி மாறன், சிலம்பரசன் கூட்டணி படத்தின் ஷூட்டிங்கில் நெல்சன் என புகைப்படம் ஒன்று, இன்று காலையில் இருந்தே வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்திற்கான அசத்தலான ஹேர் ஸ்டைலில் சிலம்பரசன் தன் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு கட்டம் போட்ட சட்டை, கட்டம் போட்ட லுங்கி காஸ்ட்யூமில் பாந்தமாக நின்று கொண்டிருக்க, அருகில் ஆச்சரியமாக இயக்குநர் நெல்சன்.

ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்ரசிகர்கள் உருவாக்கிய போஸ்டர்

தாணுவின் தயாரிப்பில் வெற்றிமாறன் 'வாடி வாசல்' இயக்குவதாக இருந்தது. சில நடைமுறை சிக்கல்களால் சூர்யா அதிலிருந்து விலகிக் கொண்டிருப்பதாகப் பேச்சு இருக்கிறது.

இந்நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத அதிசயமாக சிலம்பரசனை இயக்குகிறார் வெற்றிமாறன். இந்த கூட்டணி போலவே படமும் பல ஆச்சரியங்களைக் கொண்டதாக இருக்கும் என்கிறார்கள்.

'தக் லைஃப்' வரை நீளமான ஹேர் ஸ்டைலுடன் இருந்து வந்த சிலம்பரசன், வெற்றியின் படத்திற்காக வடசென்னை வாசியாகவே தோற்றமளிக்க உள்ளார்.

அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ள இதன் படப்பிடிப்பிற்காக இப்போது 'டெஸ்ட் ஷூட்' எடுத்துள்ளனர். சென்னை எழும்பூரில் உள்ள போலீஸ் நிலையம் அரங்கில் இந்த டெஸ்ட் ஷூட் நடந்துள்ளது.

டெஸ்ட் ஷூட்டில்டெஸ்ட் ஷூட்டில்
Vetrimaaran: "'விடுதலை' எனக்கு நிறைய கற்றுக் கொடுத்திருக்கு; இதுபோல் இன்னொரு படம்..." - வெற்றிமாறன்

குறுகிய கால தயாரிப்பாக உருவாகி, இந்தாண்டிலேயே வெளியாகும் திட்டமிடலுடன் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.

ஆண்ட்ரியா, சமுத்திரகனி, கிஷோர் தவிர இப்போது நெல்சனும், கவினும் கௌரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளதாகச் சொல்கிறார்கள். கதாநாயகி யார் என்பது முடிவாகவில்லை.

சந்தோஷ் நாராயணன் அல்லது ஜி.வி.பிரகாஷ் இருவரில் ஒருவர் இசையமைக்கலாம் என்ற பேச்சு இருக்கிறது. இன்னும் சில நாள்களில் வெற்றிமாறன் - சிம்பு படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் குழு குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் வெற்றிமாறன்

இதைப் போல தயாரிப்பாளர் தாணு, அடுத்து சூர்யாவை வைத்தும் ஒரு படம் தயாரிக்கிறார். அந்த படத்தை 'ஆவேசம்' படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

“வெற்றிமாறன் ‘நீ சென்னை வந்து கேள். வாய்ப்புத் தர்றேன்'னு சொன்னார்!”

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article