ARTICLE AD BOX
‘சூர்யா 45’ மற்றும் ‘கைதி 2’ படங்களின் ரிலீஸ் குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு (ட்ரீம் வாரியர் நிறுவனம்) பேசியிருக்கிறார்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், சூர்யா, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சூர்யா 45’.
இப்படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் ஒன்றில் ட்ரீம் வாரியர் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் ‘சூர்யா 45’ பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
எஸ்.ஆர்.பிரபு அதற்குப் பதிலளித்த அவர், “‘சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். படம் சிறப்பாக இருக்கிறது. ஜூன் 2-வது அல்லது 3-வது வாரத்தில் படம் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும்.
Tourist Family: `எப்படி விவரிப்பது; நன்றியுணர்வில் அழுகிறேன்..'- சூர்யா சந்திப்பு பற்றி இயக்குநர்!‘சூர்யா 45’ படம் ஒரு கொண்டாட்டமான திரைப்படமாக இருக்கும். ஒரு பண்டிகை தினத்தில் படத்தை வெளியிட இருக்கிறோம். அது தொடர்பான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும்” என்று கூறியிருக்கிறார்.
suriya 45இதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு, “‘கைதி 2’ படத்தின் வேலைகள் ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கி விட்டது. இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்று எஸ்.ஆர்.பிரபு பதிலளித்திருக்கிறார்
Suriya 46: சூர்யாவுடன் மமிதா பைஜூ, ஜி.வி இசை; அடுத்தாண்டு சம்மர் ரிலீஸ் - பறக்கும் சூர்யா 46சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

7 months ago
8





English (US) ·