Suriya 46 : 'கொண்டாட்டத்தை நோக்கி முதல் படி!' - தொடங்குகிறது 'சூர்யா 46' படத்தின் படப்பிடிப்பு

6 months ago 7
ARTICLE AD BOX

'ரெட்ரோ' படத்தின் ரிலீஸ் முடிந்த கையோடு தன்னுடைய அடுத்த படத்தின் வேலைகளில் களமிறங்கிவிட்டார் சூர்யா. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில். தன்னுடைய 45-வது படத்தில் சூர்யா ஒருபுறம் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் சூர்யாவுடன் த்ரிஷாவும் நடிக்கிறார். இந்தப் படப்பிடிப்பு நடந்துக் கொண்டிருக்கும்போது தன்னுடைய 46-வது படத்தையும் தொடங்கிவிட்டார் சூர்யா.

Suriya 46Suriya 46

சூர்யாவின் 46-வது படத்தை டோலிவுட் இயக்குநர் வெங்கி அத்லூரி இயக்குகிறார். 'லக்கி பாஸ்கர்', 'வாத்தி' ஆகியப் படங்களை தயாரித்த சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இப்படத்தையும் தயாரிக்கிறார்கள்.

சமீபத்தில் இத்திரைப்படத்தின் பூஜையும் ஹைதராபாத்தில் நடைபெற்றிருந்தது.

'லக்கி பாஸ்கர்' படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு டோலிவுட், கோலிவுட் என அனைத்துப் பக்கங்களிலும் இயக்குநர் வெங்கி அத்லூரி மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று முதல் தொடங்குகிறார்கள். அதற்காக ஒரு சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டு படப்பிடிப்பை தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.

இது குறித்து 'சூர்யா 46' படக்குழு, "கொண்டாட்டம், எமோஷன் மற்றும் என்டர்டெயின்மென்ட்டை நோக்கி முதல் படி" எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

Kubera: "7 மணிநேரம் நானும் ராஷ்மிகாவும் குப்பை கிடங்கில் நடித்தோம்" - குபேரா அனுபவம் பகிரும் தனுஷ்

The first step towards celebration, emotion and entertainment ❤️#Suriya46 shoot begins! @Suriya_offl #VenkyAtluri @_mamithabaiju @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NimishRavi @NavinNooli @Banglan16034849 #SaiSoujanya @SitharaEnts @Fortune4Cinemas #SrikaraStudios pic.twitter.com/WcBTgwA7LG

— Sithara Entertainments (@SitharaEnts) June 11, 2025

'சூரரைப் போற்று படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இந்தப் படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜூ முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதைத் தாண்டி ராதிகா சரத்குமார், ரவீனா டான்டூன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article