ARTICLE AD BOX
சூர்யா தற்போது 'கருப்பு' படத்தின் படப்பிடிப்பிலும், 'சூர்யா 46' படப்பிடிப்பிலும் இயங்கி வருகிறார். 'சூர்யா 46' படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் தொடங்கியது. ஷூட்டிங் இடைவெளியில் தற்போது ஆப்பிரிக்கா டூரும் சென்றிருக்கிறார் சூர்யா.
Suriya 46சூர்யாவின் 46-வது படத்தை 'லக்கி பாஸ்கர்' படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இத்திரைப்படம் தொடர்பாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார் இயக்குநர் வெங்கி அட்லூரி.
இயக்குநர் வெங்கி அட்லூரி, "'சூர்யா 46' படத்தை ஒரு பயோபிக் படமாகத்தான் எடுக்க முடிவு செய்தோம். ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றுக் கதையைப் படமாக எடுப்பதற்குத்தான் அனைவரும் தயாராகி வந்தோம். ஆனா, ஏற்கெனவே சூர்யா சார் 'சூரரைப் போற்று', 'ஜெய் பீம்' போன்ற பயோபிக் கதைகளில் நடித்துவிட்டார்.
அதனால் சூர்யா சார் பயோபிக் திரைப்படங்களில் நடிப்பதற்கு ஆர்வமாக இல்லை. பயோபிக் படத்திற்கு உரிமத்தை வாங்கும் பணிகளும் தாமதமாகிக் கொண்டே இருந்தன. பிறகு, அவரிடம் ஒரு குடும்பத்தை மையப்படுத்தியக் கதையைச் சொன்னேன்.
நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரிஅந்தக் கதையைக் கேட்டதும் தனக்குப் பிடித்திருப்பதாக சூர்யா சார் சொன்னார். அப்போது கதை சொல்லும்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைக் கூட உறுதி செய்யவில்லை.
நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்ப உணர்வுகளைப் பிரதிபலிக்கும் குடும்ப திரைப்படமாக இது நிச்சயம் இருக்கும். சஞ்சய் ராமசாமி போன்றதொரு கேரக்டரில் சூர்யா சாரைக் காண்பீர்கள்." எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·