ARTICLE AD BOX
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் புகழ்பெற்ற தொடர் ஆஷஸ் டெஸ்ட் (The Ashes). நமக்கு ஐபிஎல் போல ஆஸ்திரேலியாவுக்கு ஆஷஸ் தொடர் மிகவும் பிரபலம்.
இந்தத் தொடர் நவம்பர் மாதம் நடக்கவிருக்கிறது. இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி நட்சத்திர வீரர் ஜோ ரூட் தலைமையில் களமிறங்குகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் இதுவரை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் ஒரு சதம் கூட அடித்ததில்லை. இது இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஒரு குறையாகவே இருக்கிறது.
Joe Root - ஜோ ரூட்இந்த நிலையில், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மேத்யூ ஹைடன் தனியார் செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்திருக்கிறார்.
அதில், ``இந்த போட்டியில் ஜோ ரூட் நிச்சயம் சதம் அடிப்பார். அப்படி அவர் ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்றால், நான் MCG (மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம்) மைதானத்தை நிர்வாணமாக வலம் வருகிறேன்” எனச் சவால் விட்டிருக்கிறார்.
இந்த சவாலை தன் சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்த மேத்யூ ஹைடனின் மகள், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை டேக் செய்து, ``தயவுசெய்து ஒரு சதமாவது அடித்துவிடுங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார்.
Ashwin: "வெளிநாடுகளில் ஜாலியாக கிரிக்கெட் விளையாட வேண்டும்" - அஷ்வின் சொல்லும் காரணம் என்ன?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5







English (US) ·