The Boys: 'மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு' - க்ரேவ்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்ட பாய்ஸ் தொடர் நடிகை

6 months ago 7
ARTICLE AD BOX

பிரபல ஹாலிவுட் நடிகை எரின் மொரியார்ட்டி (Erin Moriarty) தனக்கு க்ரேவ்ஸ் (Graves) என்ற நோய் இருப்பதை கண்டறிந்துள்ளதாகவும், அனைவரையும் அந்த நோய் குறித்து பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

2010-ம் ஆண்டு அமெரிக்காவின் ஒரு தொலைக்காட்சித் தொடர் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் எரின் மொரியார்ட்டி.

Erin MoriartyErin Moriarty

அதனைத் தொடர்ந்து, 2019-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை நான்கு சீசன்களாக வெளிவந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் 'தி பாய்ஸ் (The Boys)' தொடரின் நாயகியாக நடித்து உலகெங்கிலும் பிரபலமானவர்.

நடிகர் தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமான 'தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் (The Extraordinary Journey of the Fakir)' திரைப்படத்தின் கதாநாயகியாகவும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் க்ரேவ்ஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். க்ரேவ்ஸ் நோய் என்பது தொண்டைப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பியில் நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் கோளாறு ஆகும்.

இந்த நோயினால் உடலில் தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கலாம், இதயத் துடிப்பின் வேகம் அதிகரிக்கலாம், உடல் எடை குறையலாம், மற்றும் பார்வை தொடர்பான பிரச்சனைகள் உருவாகலாம்.

Erin MoriartyErin Moriarty

இந்த நோய் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள எரின் மொரியார்ட்டி, "எனது அனுபவம் உங்களது அனுபவத்தில் இருந்து மாறுபடலாம். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு இல்லாமல் இருந்திருந்தால், நான் முன்பே இதை கண்டறிந்திருப்பேன்.

உங்களுக்கு சிறிய அறிகுறிகள் இருந்தாலும், பரிசோதனை செய்து கொள்ளுங்கள்," என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

Read Entire Article