ARTICLE AD BOX
மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு, த்ரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் 'தக் லைப்' படம் இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப் படத்தில் மணிரத்னத்திற்கு உதவி இயக்குநராக சிலர் பணிபுரிந்திருக்கின்றனர். அதில் குஷ்பு - சுந்தர்.சி -யின் மகள் அனந்திகா சுந்தரும் ஒருவர்.
குஷ்பூஇந்நிலையில் இன்ஸ்டாகிராமில் குஷ்பூ நெகிழ்ச்சியாக ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "மணிரத்னம் படத்தில் என் மகளின் பெயர் இடம் பெற்றிருப்பதைப் பார்க்கும்போது ஒரு பெற்றோராகப் பெருமையாக இருக்கிறது.
முழங்காலில் முறிவு ஏற்பட்டதால் குறுகிய காலம் மட்டுமே அவளால் உதவி இயக்குநராகப் பணியாற்ற முடிந்தது. ஆனால், மணி சாரிடமிருந்து அவள் பெற்ற அறிவும், கற்றுக்கொண்ட விஷயங்களும் அவளுடன் வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.
Thug Lifeஇந்த அனுபவம் உண்மையிலேயே மிகவும் செறிவானது. அவளுடைய பெயரைப் படத்தில் இடம்பெறச் செய்த, உங்களின் பெரிய மனதுக்கு நன்றி சார்" என்று பதிவிட்டிருக்கிறார்.

6 months ago
8





English (US) ·