Thug Life : 'தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கப்போகிறது!' - நாசர்

6 months ago 8
ARTICLE AD BOX

மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப்'

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். நாளை படம் (ஜூன் 5) திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று (ஜூன் 4)'தக் லைஃப்'  படக்குழுவினர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசி வருகின்றனர்.

‘தக் லைஃப்’ படத்தில்...‘தக் லைஃப்’ படத்தில்...

இதில் கலந்துகொண்டு பேசிய நாசர், " நாயகன் படத்தின் மூலமாகத்தான் முதன் முதலில் கமல் சருடனும், மணி சாருடனும் அறிமுகமானேன்.

அவர்கள் இருவரும் சேர்ந்து 38 வருடங்கள் கழித்து படம் பண்ணும்போது அந்தக் கூட்டணியில் நானும் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கப்போகிறது.

மணி சார், கமல் சார், ரஹ்மான் சார் இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுகிறார்கள் என்றால் அவர்களுக்கு மிகப்பெரிய மன அழுத்தம் இருக்கும். ஏனென்றால் இவர்கள் மூவரும் அவர்களுக்கென்று ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

மணி ரத்னம்,  கமல், ரஹ்மான் மணி ரத்னம், கமல், ரஹ்மான்

சிறப்பாக இந்தப் படத்தைக் கொடுக்க வேண்டும் என்ற ஒரு அழுத்தம் இருக்கும். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஏற்றத்தாழ்வுகள் எதுவும் இல்லை. இந்தப் படம் இந்திய சினிமாவிற்கு நிச்சயம் பெருமையாக இருக்கும்" என்று தெரிவித்திருக்கிறார்.

Read Entire Article