Thug Life: `நாங்கள் வித்தியாசமான படைப்பை உருவாக்க விரும்பினோம்!' - விமர்சனங்கள் குறித்து மணிரத்னம்

6 months ago 7
ARTICLE AD BOX

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவான 'தக் ஃலைப்' திரைப்படம் கடந்த ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் என பலரும் நடித்திருந்த இத்திரைப்படம் மக்களிடம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

Thug Life Thug Life

தற்போது படத்திற்கு கிடைத்த விமர்சனங்கள் தொடர்பாக மணிரத்னம் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

நாங்கள் சொல்ல விரும்புவது ஒரே ஒரு விஷயம்தான்!

அந்தப் பேட்டியில் அவர், "மற்றொரு 'நாயகன்' படத்தை எதிர்பார்த்தவர்களுக்கு நாங்கள் இருவரும் சொல்ல விரும்புவது ஒரே ஒரு விஷயம் தான், மன்னித்து விடுங்கள்.

மீண்டும் அதே பாணியில் படம் எடுப்பது எங்களின் நோக்கம் ஒருபோதும் இல்லை. அப்படி ஏன் செல்ல வேண்டும்? நாங்கள் முற்றிலும் வித்தியாசமான ஒரு படைப்பை உருவாக்க விரும்பினோம்.

இங்கு அதிகப்படியான எதிர்பார்ப்பை விட மற்றொரு எதிர்பார்ப்பு நிலவியிருக்கிறது. பார்வையாளர்கள் எங்களிடமிருந்து வேறு வடிவிலான ஒரு படைப்பை எதிர்பார்த்தார்கள்." எனக் கூறியிருக்கிறார்.

Mani RatnamMani Ratnam

கமல் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட மொழி தொடர்பாக பேசிய விஷயம் பெரும் சர்ச்சையானது. அதனை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் மட்டும் 'தக் ஃலைப்' திரைப்படம் வெளியாகவில்லை.

இதனால் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்திற்கு 30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றனர்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article