TNPL: முதல் வெற்றியை பதிவு செய்த திருச்சி அணி; கைக்கு வந்த வெற்றியை தவறவிட்ட கோவை கிங்ஸ்

6 months ago 7
ARTICLE AD BOX

டிஎன்பிஎல் 15-வது லீக் போட்டி சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை லைக்கா கோவை கிங்ஸ் எதிர்கொண்டது. டாஸ் வென்ற லைக்கா கோவை கிங்ஸ் பில்டிங்கை தேர்வு செய்தனர்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கோவை அணியின் தொடக்க வீரர் ஜித்தேஷ் குமார் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில், முதல் ஓவரிலேயே ரன் அவுட் ஆனார்.

கோவை கிங்ஸ் அணி

மற்றொரு தொடக்க வீரரான லோகேஷ்வர் 13 பந்துகளில் 11 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கோவை அணியின் கேப்டன் ஷாருக்கான் 10 பந்துகளில் 2 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்கள் திருச்சி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கோவை அணியில் அதிகபட்சமாக சித்தார்த் 39 ரன்களும், சச்சின் 38 ரன்களும் எடுத்தனர்.

20 ஓவர்கள் முடிவில் கோவை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன்மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி வெற்றி பெற்றது. திருச்சி அணியில் சிறப்பாக பந்து வீசிய அதிசயராஜ் டேவிட்சன் மூன்று விக்கெட்டுகளும், ராஜ்குமார் 2 விக்கெட்டுகளையும், ஈஸ்வரன், சரவணகுமார் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ்.. விறுவிப்பான ஆட்டம் | Photo Album
Read Entire Article