Tourist Family: 'அவருடைய அந்த ஒரு புன்னகை என்னை...'- ரஜினியின் பாராட்டு குறித்து நெகிழும் இயக்குநர்

6 months ago 7
ARTICLE AD BOX

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடிப்பில் வெளியான படம் `டூரிஸ்ட் ஃபேமிலி'.

இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. திரைத்துறையைச் சேர்ந்தப் பலர் இப்படத்தைப் பாராட்டி இருந்தனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் `டூரிஸ்ட் ஃபேமிலி' படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டி இருக்கிறார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில்...டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில்...

இதனை அபிஷன் ஜீவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " நான் சினிமாவுக்குள் கால் பதித்ததற்கானக் காரணத்தை இன்று நிறைவாக உணர்கிறேன். அவர் என் பெயரைச் சொல்லி என்னைக் கட்டிப்பிடித்த விதம், என் உடம்பெல்லாம் ஒரே சிலிரிப்பு.

அவருடைய அந்த ஒரு புன்னகை நான் சிறுவயதில் செய்த ஒவ்வொரு பிரார்த்தனையும் தாமதமாக வந்துவிட்டது போலவும், ஆனால் அது எனக்குத் தேவையான நேரத்தில் வந்தது போலவும் இருந்தது.

என்ன ஒரு மனிதர், எளிமை மற்றும் மகத்துவத்தின் சின்னம். இந்த தருணத்தை விட பெரிய உந்துதலையோ அல்லது ஆசிர்வாதத்தையோ என்னால் கேட்க முடியாது.

என்றென்றும் உங்களை நேசிக்கிறேன் ரஜினிகாந்த் சார். இந்த அன்புக்கும் சந்திப்புக்கும் எனது தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் அண்ணாவுக்கு மிக்க நன்றி. செளந்தர்யா மேடம் உங்களைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article