Tourist Family: `எப்படி விவரிப்பது; நன்றியுணர்வில் அழுகிறேன்..'- சூர்யா சந்திப்பு பற்றி இயக்குநர்!

7 months ago 8
ARTICLE AD BOX

சசிக்குமார் நடிப்பில் கடந்த மே 1ம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ள 25 வயதேயான இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் வெகுவாகப் பாராட்டப்படுகிறார்.

சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்துக்கு டூரிஸ்ட் ஃபேமிலி கடுமையான போட்டியாக அமைந்தது. எனினும் ரெட்ரோ திரைப்படம் வெற்றிகரமாக வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

Tourist Family படக்குழுவை பாராட்டிய சூர்யாTourist Family படக்குழுவை பாராட்டிய சூர்யா

இந்த சூழலில், டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குநரை சந்தித்துப் பாராட்டியுள்ளார் நடிகர் சூர்யா.

இந்த சந்திப்பு குறித்து தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டுள்ள அபிஷன் ஜீவிந்த், "இதை எப்படி விவரிப்பது எனத் தெரியவில்லை... ஆனால் எனக்குள் இருந்த ஏதோவொன்று இன்று குணமாகிவிட்டது.

சூர்யா சார் என்னை அழைத்து அவர் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை எவ்வளவு விரும்பினார் எனக் கூறினார்.

வாரணம் ஆயிரம் திரைப்படத்தை 100வது முறையாக பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு பையன் எனக்குள் இருக்கிறான். அவன் இப்போது நன்றி உணர்வில் அழுதுகொண்டிருக்கிறான். நன்றி சார்" என எழுதியுள்ளார்.

Tourist Family:

3 வாரங்கள் கழித்தும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் நடிகர் சசிகுமார், நடிகை சிம்ரன், மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், இளங்கோ குமாரவேல், ஸ்ரீஜா ரவி எனப் பலர் நடித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து பொருளாதார அகதிகளாக்கப்பட்டு படகில் தமிழகம் வரும் குடும்பத்தின் கதையைப் பேசும் இந்த ஃபீல் குட் திரைப்படம் குறித்து உங்கள் கருத்துக்களைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்.

Retro: "ஒரு Female Gangster படம் பண்ணுங்க" - கார்த்திக் சுப்புராஜிடம் பூஜா ஹெக்டே வேண்டுகோள்
Read Entire Article