ARTICLE AD BOX
மணி ரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், அபிராமி, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தக் லைப்’.
இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ஜூன் 5-ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
‘தக் லைப்’ படக்குழு இந்நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த த்ரிஷா, “சிம்புவையும், கமல் சாரையும் எனக்கு பல வருடங்களாக தெரியும். அதனால் அவர்களுடன் இந்தப் படத்தில் பணிபுரிவதற்கு எளிமை இருந்தது.
என் சினிமாப் பயணத்தில் கமல் சார் எனக்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார். சிம்புவுடன் இரண்டு படங்களில் பணியாற்றி இருக்கிறேன். (அலை, விண்ணைத்தாண்டி வருவாயா).
இந்தப் படப்பிடிப்பு தளம் ஒரு பாதுகாப்பு தளமாக இருந்தது. மணி சார் உட்பட எல்லாருடனும் ஒரு சௌகரியமான நட்பை உருவாக்கி வைத்திருந்தேன்.
‘ஆயுத எழுத்து’ படத்திற்கு பிறகு ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்தது மணி சாரை இன்னும் புரிந்துகொள்ள எளிதாக இருந்தது.
த்ரிஷாசிறப்பான பயிற்சியை அவரிடம் இருந்து பெற்றிருக்கிறேன். அவருடன் திரும்ப திரும்ப பணியாற்றுவது ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. அவரிடம் எதை, எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்ற புரிதல் எனக்கு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

7 months ago
8





English (US) ·