Tulasi: 'டிசம்பர் 31-ல் ரிடையர்மெண்ட்' - சினிமாவிலிருந்து ஓய்வு பெறுகிறாரா நடிகை துளசி?

1 month ago 2
ARTICLE AD BOX

நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார். இத்தனை ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல்வேறு மொழிகளிலும் பல வகையான கதாபாத்திரங்களிலும் துளசி நடித்து வந்தவர்.

ரஜினி, கமல், விஜய் என அத்தனை உச்ச நட்சத்திரங்களுடனும் துளசி இணைந்து நடித்திருக்கிறார்.

Actress TulasiActress Tulasi

தமிழில் இவர் நடித்த பல அம்மா கேரக்டர்கள் பெரிதளவில் கவனம் பெற்றிருக்கின்றன.

தற்போது சினிமாவிலிருந்து முழுமையாக ஓய்வு பெறப்போவதாக தனது சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்திருக்கிறார் நடிகை துளசி. ஓய்வு பெற்றப் பிறகு தன்னுடைய வாழ்க்கையை சாய் பாபாவிற்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

முதலில் சாய் பாபாவின் பாதங்களை புகைப்படமெடுத்து பதிவிட்ட அவர், "என்னையும் என் மகனையும் காத்து வழிகாட்டுங்கள் சாய் நாதா" எனக் குறிப்பிட்டு பதிவு போட்டிருந்தார்.

Actress TulasiActress Tulasi

இது தொடர்பாக அவர் போட்டிருக்கும் பதிவில், "இந்த டிசம்பர் 31-ல் எனது ஷீரடி தரிசனத்தைத் தொடர்ந்து, நான் மகிழ்ச்சியுடன் ரிடையர்மென்ட் பெற விரும்புகிறேன்.

இனி சாய்நாதருடன் அமைதியான பயணத்தைத் தொடர்வேன். வாழ்க்கையைக் கற்றுத் தந்த அனைவருக்கும் நன்றி சாய்ராம்!" எனக் குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

நடிகை துளசியின் இந்தப் பதிவு பலரையும் அதிர்ச்சிக்குள்ளக்கி இருக்கிறது. ஆனால், ரிடையர்மெண்ட் தொடர்பாக அவர் பதிவிட்டிருந்த பதிவை இப்போது அவர் நீக்கி இருக்கிறார்.

Read Entire Article