ARTICLE AD BOX
தமிழ் சினிமாவில் பன்முகத் திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ஊர்வசி.
நகைச்சுவை தொடங்கி அத்தனை கதாபாத்திரங்களையும் இயல்பாகச் செய்யும் அவருக்கு 'உள்ளொழுக்கு' திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஊர்வசிஊர்வசி, சமீபத்தில் தொகுப்பாளர் கோபிநாத்தின் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில், நடிகர் கமல்ஹாசனுடன் நடித்த அனுபவங்களையும், 'மைக்கேல் மதன காம ராஜன்' திரைப்படத்தின் புகழ்பெற்ற 'கை வச்சாலும் வைக்காம போனாலும்' பாடலின்போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவம் குறித்தும் பகிர்ந்திருக்கிறார்.
ஊர்வசி பேசுகையில், " 'கை வச்சாலும் வைக்காம போனாலும்' பாடலில் கமல்ஹாசன் என்னுடைய பாட்டியாக நடித்தவரின் காலில் மட்டும் விழ வேண்டும்.
ஆனால் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல், கமல்ஹாசன் நேரடியாக வந்து என் காலிலும் விழுந்துவிட்டார்.
அந்தச் சமயத்தில் நான் திடீரென்று ஆச்சரியப்பட்டு, அதே உணர்வோடு துள்ளிவிடுவேன்.
இது முன்கூட்டியே யாரும் திட்டமிடாத ஒரு இயல்பான தருணம்" எனச் சிரித்துக்கொண்டே கூறினார்.
Kamal Haasan - Urvashi மேலும் பேசிய அவர், "அவர் என்னை திறமையான நடிகை என்று பலமுறை கூறியுள்ளார்.
அந்த வார்த்தைகள் எனக்கு மிக உற்சாகமாக இருந்தன. இன்று வரை சினிமாவில் பெரிய கதாநாயகியாகப் பயணம் செய்வதற்கு அந்தப் பாராட்டுதலே காரணம்.
அவர் எப்போதும் திறமைகளை அடையாளம் கண்டு பாராட்டும் நல்ல மனம் கொண்ட கலைஞர்.
அவரது அன்பும் பாராட்டும் என்னைத் தொடர்ந்து முன்னேறச் செய்தன." என்று அவர் உணர்ச்சியுடன் தெரிவித்தார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

4 months ago
5





English (US) ·