ARTICLE AD BOX
இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் கம்பெனி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'Bad Girl'.
அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபள்ளி ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
மிஷ்கின்இந்நிலையில் இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (செப்டம்பர் 1) சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டிருந்தனர். சிறப்பு விருந்தினராக இயக்குநர் மிஷ்கின் கலந்துகொண்டிருந்தார்.
அப்போது, " பேரழகன் சூர்யாவும், பெரும் அறிவாளி வெற்றிமாறனும் இணைந்தால் மிகச்சிறந்த படம் நமக்கு கிடைக்கும். அப்படிபட்ட வாடிவாசல் படத்தை விரைவில் தொடங்கும்படி வெற்றியை கேட்டுக்கொள்கிறேன்" என்று மிஷ்கின் பேசியிருந்தார்.
இயக்குநர் வெற்றிமாறன்இதனைத்தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெற்றிமாறன், " சில தொழில்நுட்ப காரணங்களால் இப்போது என்னால் எதுவும் முடியாது. இன்னும் 10 நாள்களில் அப்டேட் சொல்லுவேன்" என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·