ARTICLE AD BOX
இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர் வடிவேலு, நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.
இன்று (செப். 12) தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடும் அவருக்கு, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
வடிவேலு இந்நிலையில், ரசிகர்களின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்து வடிவேலு ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:
"உலகம் முழுவதும் உள்ள என்னுடைய ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கம். இன்று என்னுடைய பிறந்தநாள். இந்தப் பிறந்தநாளில் உலகம் முழுவதும் உள்ள பலரும் என்னை மனதார வாழ்த்தியிருக்கிறீர்கள்."
இந்த வாழ்த்து என் குலதெய்வத்தை விட மேலான ஒன்றாக இருக்கிறது. மக்கள்தான் என் கடவுள். மக்கள்தான் எனக்கு எல்லாமே.
நீங்கள் இல்லை என்றால் இந்த வடிவேலே இல்லை.
வடிவேலுஇன்றைக்கு இந்த அளவிற்கு இருக்கிறேன் என்றால் அதற்கு உங்களுடைய ஆசீர்வாதம்தான் மிக முக்கியக்காரணம்.
உங்களுடைய வாழ்த்து இன்று மட்டும் அல்ல. என்றைக்குமே வேண்டும்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
``எனது முதல் வீட்டை இலவசப் பள்ளியாக மாற்றி இருக்கிறேன்; முதல் ஆசிரியர் இவர்தான்'' - ராகவா லாரன்ஸ்சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·