Vaibhav Suryavanshi: 'நான் அழவே இல்ல, என்ன நடந்ததுன்னா' - விளக்கும் வைபவ் சூர்யவன்ஷி

7 months ago 8
ARTICLE AD BOX

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக வைபவ் சூர்யவன்ஷி என்கிற 14 வயது வீரர் ஆடி வருகிறார்.

ஐ.பி.எல் வரலாற்றின் மிக இளம் வயது வீரர் எனும் பெருமையையும் வைபவ் பெற்றிருக்கிறார்.

லக்னோவுக்கு எதிரான அறிமுக போட்டியில் 34 ரன்களை எடுத்து அசத்தியிருந்தார்.

Vaibhav SuryavanshiVaibhav Suryavanshi

எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சரும் ஆக்கியிருந்தார். அது அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தது.

அனைவரும் வைபவ்வை நெகிழ்ந்து பாராட்டினர். அந்தப் போட்டியில் 34 ரன்களில் அவுட்டானப்போது சூர்யவன்ஷி கண்களைத் துடைத்துக்கொண்டே வெளியேறினார்.

இதைப் பார்த்து அவர் அழுதுகொண்டே வெளியேறுகிறார் என்றே அனைவரும் நினைத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து சூர்யவன்ஷி விளக்கம் அளித்திருக்கிறார். “எல்லோரும் ஏன் அழுதாய்? என்றே கேட்கின்றனர்.

Vaibhav SuryavanshiVaibhav Suryavanshi

நான் எப்போது அழுதேன்? அங்கிருந்த மின் விளக்குகள் மற்றும் LED திரைகளைப் பார்த்ததும் கண்கள் கூசியதால், கண்களைத் தேய்த்துக்கொண்டே வெளியேறினேன்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Read Entire Article