Varun Chakaravarthy : 'பந்து அவ்வளவா ஸ்பின் ஆகல!' - டார்கெட்டை எட்ட வருண் சொல்லும் வழி

9 months ago 9
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டி நடந்துகொண்டிருக்கிறது. நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்து 251 ரன்களை எடுத்திருக்கிறது. இந்தியாவுக்கு 252 ரன்கள் டார்கெட். இதில் தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி 10 ஓவர்களில் 45 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இரண்டுமே முக்கியமான விக்கெட்டுகள். ஓப்பனர் வில் யங் மற்றும் நீண்ட நேரம் நின்று ஆடிய க்ளென் பிலிப்ஸ் என இருவரின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்நிலையில், முதல் இன்னிங்ஸ் முடிந்தவுடன் பந்துவீச்சைப் பற்றி வருண் சக்கரவர்த்தி பேசியிருந்தார்.

IND vs NZ: ஸ்பின்னர்கள் இருக்க பயமேன்; சொல்லியடித்த ரோஹித்; நியூசிலாந்து தடுமாறியது ஏன்?
Varun Chakaravarthy

வருண் பேசியதாவது, ``கடந்த போட்டியைவிட இது நல்ல பிட்ச். பந்து அவ்வளவாகத் திரும்பவில்லை. ஸ்டம்ப் டூ ஸ்டம்பாக வீசி பேட்டர்கள் தவறு செய்யும் வரைக் காத்திருந்தேன். நான் பவர்ப்ளேயிலும் வீசினேன். டெத்திலும் வீசினேன். அது நல்ல அனுபவமாக இருந்தது. பௌலிங்கின்போது குல்தீப்பிடம் உரையாடுவதை விரும்புவேன். அக்சர், ஜடேஜா என எல்லாருமே நன்றாக ஒத்துழைப்பார்கள்.

நான் இந்த அணிக்குப் புதிது. அதனால் வீரர்களுடன் இன்னும் நெருக்கமான நட்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும். பேட்டிங்கில் நல்ல தொடக்கம் கிடைத்தால் இது எட்டக்கூடிய டார்கெட்டே." என்றார்.

இந்தியா

இந்திய அணி நியூசிலாந்தை வீழ்த்துமா என்பதை கமென்ட்டில் தெரியப்படுத்துங்கள்

Read Entire Article