ARTICLE AD BOX
வெற்றி மாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு 'விடுதலை' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியிருந்தது. அப்படத்திற்குப் பிறகு அவர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவிருப்பதாக முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சில காரணங்களால் அப்படம் தாமதமாவதால், அப்படத்திற்குப் பதிலாக சிம்புவை வைத்து வேறொரு படத்தை எடுக்கவிருப்பதாகப் பேசப்பட்டது.
வெற்றி மாறன்அதற்காக வெற்றி மாறன் மேற்கொண்ட ப்ரோமோ ஷூட் புகைப்படங்களும் கசிந்தன. தன்னுடைய அடுத்தப் படம் குறித்து பல்வேறு ஊகங்கள் பேசப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் வெற்றி மாறனே தன்னுடைய அடுத்தப் படம் குறித்து விளக்கமளித்து ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார்.
சிம்பு நடிக்கவிருக்கிறார்!
வெற்றி மாறன் பேசுகையில், "என்னுடைய அடுத்தப் படத்தை தாணு சார் தயாரிக்கவிருக்கிறார். அதில் சிம்பு நடிக்கவிருக்கிறார்.
நீங்கள் என்னுடைய அடுத்தப் படத்தைப் பற்றி கேட்டீர்கள், அதற்கான பதில்தான் இது. எழுத்துப் பணிகளில் ஏற்படும் தாமதங்களாலும், தொழில்நுட்பக் காரணங்களாலும், விலங்குகள் மற்றும் நடிகர்களின் பாதுகாப்பு கருதியும் 'வாடிவாசல்' திரைப்படம் உருவாகுவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கிறது.
தாணு சார்தான் 'சிம்புவைச் சந்திக்கலாமா' என்று கேட்டார். பிறகு, நான் சிம்புவைச் சந்தித்தேன்.
Vetrimaaranசந்திப்பின் அடுத்த சில மணி நேரங்களிலேயே எல்லாம் சரியாக அமைந்தது. இது 'வடசென்னை 2' ஆக இருக்கும் என்று பேச்சுகள் இருக்கின்றன. ஆனால், இது 'வடசென்னை 2' இல்லை.
கண்டிப்பாக, 'வடசென்னை 2' அன்புவின் எழுச்சியாகத்தான் இருக்கும். தனுஷ் நடிப்பதுதான் 'வடசென்னை 2' ஆக இருக்கும். இந்தப் படம் 'வடசென்னை' உலகத்தில் நடக்கும் கதை.
'வடசென்னை' படத்தின் கதை நிகழும் காலகட்டத்தில்தான் இந்தப் படத்தின் கதையும் நிகழும்." என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

6 months ago
7





English (US) ·