Vetrimaaran: "நானே ஸ்கிரிப்ட் எழுதாமல் இருக்கும்போது எப்படி அதை கொடுக்க முடியும்? " - வெற்றிமாறன்

3 months ago 5
ARTICLE AD BOX

வெற்றி மாறன் தயாரித்திருக்கும் 'பேட் கேர்ள்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகிறது.

இப்படத்தோடு தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக சமீபத்தில் அவர் அறிவித்திருந்ததும் பலருக்கும் நினைவிருக்கலாம்.

இந்தப் படத்தின் வெளியீட்டை ஒட்டி வெற்றி மாறனும் சில நேர்காணல்கள் கொடுத்து வருகிறார்.

`BAD GIRL' படம் `BAD GIRL' படம்

அந்த வரிசையில் ஹாலிவுட் ரிப்போர்டர் ஊடகத்தின் இந்தியப் பதிப்பிற்கு அளித்த பேட்டியில் அவருடைய ஸ்கிரிப்ட் எழுதும் முறை குறித்து பேசியிருக்கிறார்.

வெற்றி மாறன் பேசும்போது, "நான் என் நடிகர்களுக்கு ஸ்கிரிப்ட் கொடுக்க மாட்டேன். நானே ஸ்கிரிப்ட் எழுதாமல் இருக்கும்போது எப்படிக் கொடுக்க முடியும்?

ஒரு குறிப்பிட்ட நாளில் எந்தக் காட்சி படமாக்கப்படும் என்பது மட்டுமே நடிகர்களுக்குத் தெரியும்.

அதில் என்ன மாற்றங்கள் நிகழப் போகிறது என்பது அவர்களுக்குத் தெரியாது. முக்கியமான காட்சிகளுக்கு அதிக விவரங்கள் தேவைப்பட்டால், நான் முன்கூட்டியே நடிகர்களுக்கு தெரிவிப்பேன்.

VetrimaaranVetrimaaran

ஒரு படத்தின் தொடக்கத்தில் சுமார் 100 பக்கங்கள் எழுதப்பட்டிருக்கும் ஸ்கிரிப்ட், படப்பிடிப்பு முடியும்போது அது 400 பக்கங்களாக இருக்கும்.

என் முதல் டிராஃப்டை நம்பக் கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். என் பணி முறையால் சில நடிகர்கள் தொந்தரவு அடைந்திருக்கிறார்கள்.

அதனால், சிலர் என்னுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதில்லை." எனக் கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article