Vijay: "சினிமா அவரை மிஸ் பண்ணும்"- ராஜபக்சே மகன் வாழ்த்து

3 hours ago 1
ARTICLE AD BOX

விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் 'ஜனநாயகன்' வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது.

அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Vijay - Jana Nayagan Audio LaunchVijay - Jana Nayagan Audio Launch

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

'ஜனநாயகன்' படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (டிச. 27) மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் விஜய்யின் அரசியல் பயணம் வெற்றிகரமாக அமைய இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே தனது எக்ஸ் தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

Vijay - Jana Nayagan Audio LaunchVijay - Jana Nayagan Audio Launch

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "திரைத்துறையில் விஜயுடைய ஆற்றலை அனைவரும் அறிவோம். சினிமா பயணத்திற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை அவர் தொடங்கியுள்ளார்.

சினிமா அவரை மிஸ் பண்ணும். எதிர்வரும் பயணத்தில் அவர் வெற்றி பெற வாழ்த்துகள்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Read Entire Article