Vijay: 'முதல்வர் விஜய் அதிரடி...' - வைரலான 'யாதும் அறியான்' டிரைலர்; என்ன சொல்கிறார் இயக்குநர்?

5 months ago 7
ARTICLE AD BOX

அப்பு குட்டி, தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கிற 'யாதும் அறியான்' திரைப்படம் இம்மாதம் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படத்தை அறிமுக இயக்குநர் எம். கோபி இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி அதிலிருக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

Sivakarthikeyan Sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயனும் படத்தின் டிரைலர் வித்தியாசமாக இப்படக்குழுவினரையும் அழைத்துப் பாராட்டியிருந்தார்.

இந்த டிரைலரில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் 2026-ல் முதலமைச்சராகி இருப்பது போலவும், 'தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள்' என உத்தரவிட்டது போலவும் காட்சி ஒன்றை வைத்திருக்கிறார்கள்.

இன்று அப்படத்தின் இயக்குநர் கோபி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது இந்தக் காட்சி குறித்து விளக்கமளித்தார். "நான் விஜய் ரசிகன், திரைத்துறையில் பயணிக்கும் போது அனைவருக்கும் ஏற்படுவது போலத்தான், அவரை வைத்து ஒரு படம் இயக்க மாட்டோமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், அவரது அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்து கொண்டிருந்த நிலையில், 69 வது படத்துடன் அவர் நடிப்பதை நிறுத்துவிடப் போகிறார், என்பது அதிர்ச்சியாக இருந்தது.

Vijay Reference in Yaathum Ariyan MovieVijay Reference in Yaathum Ariyan Movie

இனி அவருடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அதே சமயம், அவரைப் பற்றிப் பேசுவதற்கான இடம் படத்தில் அமைந்ததாலேயே அப்படிப்பட்ட காட்சிகளை வைத்தோம். அது முழுக்க முழுக்க கற்பனையானதே தவிர மற்றபடி அதில் வேறு எந்த அரசியல் பிரசாரமும் இல்லை" எனக் கூறியிருக்கிறார்.

TVK Vijay Full Speech: விஜய்தான் முதல்வர் வேட்பாளர் | 'DMK, BJP கூட கூட்டணி இல்லை' | தவெக செயற்குழு

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article