ARTICLE AD BOX
"மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த தெய்வம், மதுரை சாப்பாடு மிகவும் பிடிக்கும்" என்று நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் கலகலப்பாகப் பேசினார்.
நகைக்கடை திறப்பு விழாவில் கலந்துகொள்ள மதுரை வந்த பிரபல திரைப்பட கலைஞர் ஐஸ்வர்யா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசும்போது, "மதுரை ரொம்ப பிடிக்கும், க/பெ ரணசிங்கம், பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட படங்களில் சூட்டிங்கிற்காக அடிக்கடி மதுரை வந்திருக்கிறேன்.
மீனாட்சியம்மன் எனக்குப் பிடித்த கடவுள். மதுரைக்கு எப்போது வந்தாலும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் செல்வேன், இந்த முறை செல்ல முடியவில்லை. மதுரை சாப்பாடு மிகவும் பிடிக்கும், நான் தீவிரமான நான்வெஜிடரியன்" என்றவரிடம், 'அரசியலுக்கு வருவீர்களா?' என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, "இல்லை" என்றார்.
ஐஸ்வர்யா ராஜேஷ்"விஜய் அழைத்தால் அரசியலுக்கு வருவீர்களா?" எனக் கேட்டதற்கு, "எனக்கு அதில் எந்த விருப்பமும் இல்லை" என்றார்.
ரசிகர் ஒருவர் அருகிலிருந்த பெண்ணைத் தள்ளிவிட்டு செல்பி எடுக்க வந்ததைப் பார்த்த ஐஸ்வர்யா ராஜேஷ் அந்த நபர் மீது கோபப்பட்டதோடு, 'இது போன்று பெரியவங்கள தள்ளிவிட்டுட்டு செல்பி எடுக்க வரக்கூடாது' எனக் கண்டித்தவர் பின் அவருடன் செல்பி எடுத்தார்.
Madharaasi Review: ஆக்ஷன் மோடில் சிவகார்த்திகேயன், பரபர திரைக்கதையுடன் ஏ.ஆர்.முருகதாஸ்; ஆனா லாஜிக்?சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

3 months ago
5





English (US) ·