Vijayakumar: ``குலக்கல்வி முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டேன்" - நடிகர் விஜயகுமார் ஓபன் டாக்

6 months ago 7
ARTICLE AD BOX

சென்னை புரசைவாக்கத்தில் முத்தமிழ் அறிஞரின் செம்மொழி நாள் விழா அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

இதில் நடிகர் விஜயகுமார் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, ``என் ஊர் பட்டுக்கோட்டை. நான் படிக்கும்போது ராஜாஜி முதல்வராக இருந்தார். அப்போதுதான் குலக்கல்வி முறை அமலுக்கு வந்தது.

பாதி நேரம் படிக்க வேண்டும். பாதி நேரம் வேலை பார்க்க வேண்டும். நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் நான் என் படிப்பை 8-ம் வகுப்போடு முடித்துக்கொண்டேன்.

ராஜாஜிராஜாஜி

இந்தக் குலக்கல்வி முறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஆனால் இப்போது தமிழ்நாட்டின் முதல்வர் அனைவரும் படிக்க வேண்டும் என மதிய உணவு மட்டுமல்ல காலை உணவும் வழங்குகிறார்.

குறிப்பாக பெண்கள் முன்னேற்றத்துக்கு உழைத்துக்கொண்டிருக்கிறார். கல்விக்காக முதல்வர் ஸ்டாலினை விட வேறு யாரும் இப்படிச் செயலாற்ற முடியாது" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

"நீட் முழுக்க பணம்தான் விளையாடுகிறது; வினாத்தாள் முதல் ரிசல்ட் வரை எல்லாம் குளறுபடி" - ஸ்டாலின்

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Read Entire Article